• February
    17
    Monday

Main Area

Main



"நாங்க காதலிக்க ஆரம்பிச்சு 5 வருஷம் ஆகிடுச்சு" நயன்தாரா - விக்னேஷ் சிவன் க்யூட் லவ் ஸ்டோரி!

நயன்தாரா
நயன்தாரா

 உலக காதலர் தினம் நேற்று  கொண்டாடப்பட்டது.  இதனால்  திரை பிரபலங்கள்  காதலர் தினத்தை  முன்னிட்டு தங்களின் போஸ்ட்டுகளை இணையத்தில்  வெளியிட்டு வருகிறார்கள்.

 

நயன்- விக்னேஷ் சிவன்

அந்த வகையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் தின வாழ்த்தினை  பரிமாறி கொண்டுள்ளனர். 

 

ttn

 

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர்  விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  காதலர் தினத்தை  முன்னிட்டு  நடிகை நயன்தாரா தனது டிவிட்டர் பக்கத்தில்  க்யூட் லவ் ஸ்டோரி என்று பதிவிட்டு தன் காதலன் விக்னேஷ் உடன் இருக்கும்  புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதே போல் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. காத்துவாக்குல எப்படி போனது என்றே தெரியவில்லை. இந்த ஐந்து வருடத்தில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கிறது. உன்னுடைய காதல் மற்றும் அன்பினால் தினமும் நமக்கு காதலர் தினம் தான் என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள்,  நீண்ட நாள் காதலர்களாக வாழும் நீங்க சீக்கிரமாகத் திருமணம் செய்ய வாழ்த்துகள் என்று கூறிவருகிறார்கள். 

 

2018 TopTamilNews. All rights reserved.