darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



அதே லோகேஷன், அதே காதலர்! நியூயார்க்குக்கும் நயனுக்கும் என்ன தொடர்பு! 

நயன்தாரா
நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் நயன்தாரா நியூயார்க்கில் தான் கொண்டாடுகிறார். அதாவது கடந்த வருட பிறந்தநாளையும் நடிகை நயன் தாரா நியூயார்க்கில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். 

Nayan

கடந்த சில நாட்களுக்கு முன் நியூயார்க்கில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகளுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இதிலிருந்து வலிமை படத்தில் நடிக்க நயந்தாரா ஒப்பந்தமானதாகவும் அதற்காக படக்குழுவினருடன் நியூயார்க் பறந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் பிறந்த நாளை கொண்டாடவே நடிகை நயன்தாரா தனது காதலனுடன் நியூயார்க் சென்றுள்ளார். 

Nayan

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நயனின் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படம் சென்ட்ரல் பார்க்கில் விக்னேஷும், நயன்தாராவும் நடந்து செல்வது போலவும் மற்றொரு புகைப்படம் ப்ரோக்லைன் பாலன் மீது இருவரும் நெருக்கமாக போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.