இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை ஒரே நாடாக பா.ஜ.க. இணைத்தால் வரவேற்போம்… தேசியவாத காங்கிரஸ்

இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை ஒரே நாடாக பா.ஜ.க. இணைத்தால் வரவேற்போம்… தேசியவாத காங்கிரஸ்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக பா.ஜ.க. உருவாக்கினால் அந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் தேவேந்திர பட்னாவிஸ், நாங்கள் ஐக்கிய (பிரிக்கப்படாத) இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா கேபினட் அமைச்சருமான நவாப் மாலிக்கிடம் அவரது கருத்து குறித்து கேட்டனர். அதற்கு நவாப் மாலிக் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை ஒரே நாடாக பா.ஜ.க. இணைத்தால் வரவேற்போம்… தேசியவாத காங்கிரஸ்
நவாப் மாலிக்

தேவேந்திர பட்னாவிஸ் ஜி கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் நேரம் வரும் என்று கூறினார். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். பெர்லின் சுவரை இடிக்க முடியும் என்றால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஏன் ஒன்றாக முடியாது? இந்த 3 நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாட்டை உருவாக்க பா.ஜ.க. விரும்பினால் நாங்கள் அதனை நிச்சயமாக வரவேற்போம்.

இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை ஒரே நாடாக பா.ஜ.க. இணைத்தால் வரவேற்போம்… தேசியவாத காங்கிரஸ்
காங்கிரிஸ், சிவ சேனா, தேசியவாத காங்கி்ரஸ்

பி.எம்.சி. (பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன்) தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளது. அதற்காக பணியாற்ற அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு, அனைத்து கட்சிகளும் அதனை செய்கின்றன. நாங்களும் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் ஆட்சி செய்யும் 3 கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.