நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

 

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் அறிவின் உருவமான சரஸ்வதியை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்படுகிறது அவள் ஒரு தூய்மையான வெள்ளை நிற புடவை அணிந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறாள். இது உச்ச சத்தியத்தின் வெளிச்சத்தை குறிக்கிறது. ஒரு மனிதன் வாழ்வின் அனைத்து தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான துர்கையை வழிபட வேண்டும். அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற லட்சுமியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.

மேலும் அறிவைப் பெறுவதற்காக சரஸ்வதியை வணங்க வேண்டும். இந்த மூன்றும் ஒரு முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை. உண்மையில், நாம் இவ்வாறு வணங்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி தூண்டப்படுகிறது.

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

நவராத்திரி ஒன்பதாம் நாளில் சிவப்பெருமான் தன் முகத்தில் நவரசங்களையும் காட்டி சிருங்கார தாண்டவ நடனம் ஆடிய நவரசக்கோலத்தில் இருந்து வெளிப்பட்டவளே சித்தித்தாரி தேவி. நவராத்திரி விழாவின் இறுதி நாளாம் மகா நவமி அன்று ‘சித்தி தாத்ரி’யை ஆராதனை செய்வர். சித்தி என்றால் ‘சக்தி’ என்றும் தாத்ரி என்றால் ‘தருபவள்’ என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தின்படி எட்டு விதமான சித்திகள் -அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் என எட்டு விதமான சித்திகளையும் பக்தருக்கு தருபவள் இவள்.

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

தேவி சித்திதாத்ரி சிவப்பு நிற புடவை அணிந்து, தாமரை மலரில் அமர்ந்து இருப்பவள். நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும், சிங்க வாகனத்தில் அருள் பலிக்கிறார். ஆதி சக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி எனப் பெயர் பெற்றாள். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவியை மும்மூர்த்திகளும் போற்றி பூஜிப்பதால் பரமாத்மாவை அறிய வைக்கிறாள். எல்லாமும் ஒரு மகாசக்தியில் இருந்து தோன்றியதே என்ற தத்துவத்தை உணரவைப்பவள். தேவி புராணத்தில், சிவன் இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என கூறுகிறது.

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பச்சை கற்பூரம் மற்றும் வாசனைப் பொடிகளை கலந்து தாமரைப் பூ ஆயுதங்கள் இருப்பது போல கோலம்போட்டு, சாமந்தி பூ, மல்லிகைப் பூவால் அலங்கரித்து, தாமரை பூ, மரிக்கொழுந்துவால் அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியமாக நாவல் பழமும், பச்சரிசி, பால், சர்க்கரை கலந்த பால் பாயசம், சர்க்கரை பொங்கல், மற்றும் கருப்பு கொண்டக்கடலை படைத்து வழிபட வேண்டும்.

மந்திரம்: ஓம் ஸித்திதாத்ரீயை நம; என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டால், விரும்பிய செல்வங்களைத் தருவாள். மோட்ச சாம்ராஜியத்தை அருள்வாள்.

இவளின் அருள் யோகிகளுக்கு அனைத்து சித்திகளையும் தரும். நவராத்ரியின் எட்டு நாட்களில் மற்ற அனைத்து சித்திகளையும் அடைந்த அவர்கள் இவள் அருளால் பேரானந்தம் என்னும் பேற்றை பெறுவர். இவளை வழிபட்டால் மனதில் உள்ள ஐயம் நீங்கும். இவளை வழிபடுவோர் பேரானந்தத்தை அடைவர். அவர்களுக்கு தேவை என்ற ஒன்று இருக்காது. அம்பிகையின் கருணை மழையில் நனைவர். இத்துர்கை அன்னைக்கு காசியில் சித்திதாத்ரி சங்கடா என்னுமிடத்தில் கோயில் உள்ளது.

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சித்தத்தை தெளிவுப்படுத்தி மோட்சத்துக்கு வழிகாட்டுவாள் சித்திதாத்ரி!

இவளுக்கான தியான மந்திரம்.

“சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ ”

பொருள்: சித்தர், கந்தர்வர், தேவர், முனிவர், மனிதர், யட்சர் என அனைவராலும் வணங்கப் படுபவளும், என்றும் வெற்றி ஒன்றையே பெறும் தேவி சித்திதாத்ரி என்னுடைய அனைத்து செயல்களிலும் ஜெயத்தை தர வேண்டும். சுகமான வாழ்வு, கல்வியில் சிறந்து விளங்க, அரசியலிலும், வேலையிலும், பதவி தொடரவும், எந்த தொடரில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் நவராத்திரியின் இறுதிநாளான இன்று சித்திதாத்ரி தேவியை பூஜித்து பலன் பெறுங்கள். ஓம் சக்தி! பராசக்தி!! ஆதிபராசக்தி!!!

-வித்யா ராஜா