Home ஆன்மிகம் அனைத்து வளங்களும் தரும் நவராத்திரி குமாரி பூஜை!

அனைத்து வளங்களும் தரும் நவராத்திரி குமாரி பூஜை!

சக்தியின் சொரூபமான அன்னையை மட்டுமல்லாமல், அன்னை சக்தியின் அம்சமாகத் திகழும் பெண்களைப் போற்றி வணங்கும் அற்புத வைபவமே நவராத்திரித் திருவிழா. தாயே… “உன்னை மனதார பிரார்த்தித்து இந்த நவராத்திரி பூஜையை செய்யப் போகிறேன். எந்தவித தங்குதடையின்றி, நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்க வேண்டும். பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா

முதலானவற்றையும், அன்னைக்கு பிடித்த உணவு பாதார்த்தங்களான, பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பருப்பு சாதம் மற்றும் தானியங்களான கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். நவராத்திரி காலத்தில் குமாரி பூஜை இன்றியமையாததாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட பூப்பெயராத குமாரிகளை அன்னையின் வடிவங்களாகப் பாவித்து வழிபடுவது மரபு. முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு

நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணிகலன்கள், பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்குமம், தட்சணை கொடுத்து உபசரித்து அறுசுவை உணவு படைத்தல் வேண்டும். அன்னை சக்தியுடன் பெண்களையும் தேவியின்

வடிவங்களாக வழிபடும் நவராத்திரி ஒன்பது நாள்களும் நாம் செய்யும் தேவி பூஜை, நம்மையும் நம் சந்ததியினரையும் காலம் முழுவதும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்யும். நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். நம் மனமும், எண்ணங்களும், செயல்களும், வாழ்க்கையும் செம்மையாகும். நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தியுடன் வழிபட்டால்நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களும் நீங்கும்.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக,...

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி...

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும்.ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!