பஞ்சாப் அரசாங்கம் மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிப்போம்.. சித்துவின் ஆலோசகர்கள் உறுதி

பஞ்சாப் அரசாங்கம் மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிப்போம்.. சித்துவின் ஆலோசகர்கள் உறுதி

காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், பஞ்சாப் அரசாங்கம் மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிப்போம் என்று சித்துவின் ஆலோசகர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் பியாரே லால் கார்க் மற்றும் மல்விந்தர் சிங் மாலி. மல்விந்தர் சிங் மாலி கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில், காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தையும், தலிபான்களுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவு செய்து இருந்தார். மேலும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் சர்ச்சைக்குரிய புகைப்படத்தையும் வெளியிட்டார்.

பஞ்சாப் அரசாங்கம் மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிப்போம்.. சித்துவின் ஆலோசகர்கள் உறுதி
நவ்ஜோத் சிங் சித்து

சித்துவின் மற்றொரு ஆலோசகர் பியாரே லால் கார்க், பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை கேள்வி எழுப்பினார். சித்துவின் ஆலோசகர்களின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக தன்னை வந்து சந்திக்கும்படி தனது ஆலோசகர்களுக்கு சித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பியாரே லால் கார்க் மற்றும் மல்விந்தர் சிங் மாலி ஆகியோர் சித்துவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். .இந்த சந்திப்பு பிறகு பியாரே லால் கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாப் அரசாங்கம் மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிப்போம்.. சித்துவின் ஆலோசகர்கள் உறுதி
காங்கிரஸ்

மாநிலத்தின் வளர்ச்சி விவகாரங்கள் குறித்து சித்து ஜியிடம் பேசினோம். ஒரு அரசாங்கம் நல்ல வேலையை செய்யும் போது அதை நாங்கள் பாராட்டுகிறோம். அது மோசமான வேலையை செய்தால், நாங்கள் அதை விமர்ச்சிக்கிறோம். நான் எதை சொல்ல வேண்டுமோ அதை நான் சமூக ஊடகங்களில் கூறியுள்ளேன். அதுதான் இறுதியானது. யாராவது தவறு செய்தால் அவர்கள் சிந்திக்க வேண்டும். நாம் பஞ்சாபின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.