முகத்தில் தூசி உள்ளது. ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்கிறது… மத்திய அரசை சாடிய நவ்ஜோத் சிங் சித்து

முகத்தில் தூசி உள்ளது. ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்கிறது… மத்திய அரசை சாடிய நவ்ஜோத் சிங் சித்து

முகத்தில் தூசி உள்ளது ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்கிறது என மத்திய அரசை நவ்ஜோத் சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர். ஆனால் சமீபகாலமாக மிகவும் மவுனமாக இருந்து வந்தார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அம்மாநில அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்காத கோபத்தில் இருந்தார். இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய விவசாய மசோதாக்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார்.

முகத்தில் தூசி உள்ளது. ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்கிறது… மத்திய அரசை சாடிய நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில், வேளாண்மை என்பது பஞ்சாபின் ஆன்மா. உடலின் காயங்கள் குணமடையக்கூடும். ஆனால் நம் உணர்வின் மீதான தாக்குதல், நம் இருப்பை சகித்து கொள்ளமுடியாது. இன்கிலாப் ஜிந்தாபாத், பஞ்சாப், பஞ்சாபியாத் மற்றும் ஒவ்வொரு பஞ்சாபியும் விவசாயிகளுடன் இருப்பதாக போர் முரசு கூறுகிறது என பதிவு செய்து இருந்தார்.

முகத்தில் தூசி உள்ளது. ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்கிறது… மத்திய அரசை சாடிய நவ்ஜோத் சிங் சித்து
விவசாயி

சித்து மற்றொரு டிவிட்டில், அரசுகள் ஒரே தவறை செய்கின்றன. அதன் முகத்தில் தூசி உள்ளது. ஆனால் அது கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறது என பதிவு செய்துள்ளார். சித்து மீண்டும் அதிரடியாக கருத்துக்களை கூற தொடங்கியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.