இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

மும்பையில் சிவசேனா நிர்வாகிகளால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி இனி நான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளன் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

மும்பையின் கொண்டிவாலி கிழக்குப் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனால் அவரை சிவசேனா தொண்டர்கள் தாக்கினர். இது தொடர்பாக சிவசேனா கட்சியின் பிரமுகர்

இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

கமலேஷ் கதம் உள்ளிட்ட நான்கு தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா இன்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோசியாரியை ஆளுநர் மாளிகையில் வைத்து இன்று சந்தித்து பேசினார்.

இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “இனிமேல் நான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பக்கம் இருப்பேன். நான் தாக்கப்பட்ட போது அவர்கள் நான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பக்கம் சார்புடையவன் என்று கூறினார்கள். எனவே, தற்போது நான் என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நபராக அறிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இனி நான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்… மும்பையில் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி அறிவிப்பு!

சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டார் என்பதற்காக அவரை ஆளுநர் அழைத்து பேசியது மாநில அரசில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி நடப்பதாக சிவசேனா தொடர்ந்து பா.ஜ.க மீது குற்றச்சாட்டை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.