காலையிலே இந்த காப்பிய குடிக்கிறவங்க ,மெடிக்கல் படிக்கட்டையே மிதிக்க வேணாம் .

 

காலையிலே இந்த காப்பிய குடிக்கிறவங்க ,மெடிக்கல் படிக்கட்டையே மிதிக்க வேணாம் .

1.வர மல்லி காபி

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள்  போட்டு குடித்து வந்த மல்லி காஃபியில் இருக்கும் ஆரோக்கிய ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க . இந்த காஃபியை முறைப்படி சுவையாக எப்படி போடுவது? 2 கப் அளவு கொத்தமல்லி காஃபி யை தயார் செய்ய தேவையான பொருட்கள். வரமல்லி – 2 ஸ்பூன், இஞ்சி – 2 சிறிய துண்டுகள், ஏலக்காய் – 2, நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.-

காலையிலே இந்த காப்பிய குடிக்கிறவங்க ,மெடிக்கல் படிக்கட்டையே மிதிக்க வேணாம் .

முதலில் ஒரு சிறிய உரலில் இஞ்சியை போட்டு நன்றாக இடித்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வர மல்லி சேர்த்து ஒன்றும் இரண்டுமாக கொரகொரப்பாக இடித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 ஏலக்காய்களையும் அந்த சிறிய உரலில் போட்டு நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  தண்ணீர் சேர்க்காமல் பாலை கொஞ்சம் சூடு படுத்தி அப்படியே ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, வரமல்லி, ஏலக்காய் இந்த 3 பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். 5 நிமிடங்கள் வரை இந்த தண்ணீர் மிதமான தீயில் கொதிக்க வேண்டும். இதில் சேர்த்திருக்கும் மூன்று பொருட்களில் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். இறுதியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் ஒரு வடிகட்டியில், வடிகட்டி தண்ணீரை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போ சூப்பரான வர மல்லி காபி ரெடி

2.சுக்கு மல்லி காபி

சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருந்து வருகிறது. சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப் படுகிறது.

சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

 செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல்,வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் இதை குடிங்க .