உங்கள அங்கிள்னு கூப்பிடுற பொண்ணுங்கள ஹாய்னு கூப்பிட வைக்க, முடிய கருகருன்னு மாற்றும் இந்த பழம்

 

உங்கள அங்கிள்னு கூப்பிடுற பொண்ணுங்கள ஹாய்னு கூப்பிட வைக்க, முடிய கருகருன்னு மாற்றும் இந்த  பழம்

உங்கள் அன்றாட உணவில் கருப்பு திராட்சையும் சேர்த்து வந்தால் , உங்கள் தலைமுடியின்  நரைப்பதை நிறுத்தலாம். அவை இரும்புச்சத்து மட்டுமல்ல, அதிக அளவு வைட்டமின் சி யையும் கொண்டிருக்கின்றன, அவை தாதுக்களை வேகமாக உறிஞ்சுவதற்கு உதவுகின்றன மற்றும் கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. எனவே, கருப்பு திராட்சை உட்கொள்வது நமது தலைமுடியின் ஆரோக்கியத்தையும் இயற்கையான நிறத்தையும் பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள அங்கிள்னு கூப்பிடுற பொண்ணுங்கள ஹாய்னு கூப்பிட வைக்க, முடிய கருகருன்னு மாற்றும் இந்த  பழம்

கருப்பு திராட்சைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் உள்ளன. இந்த இரண்டு சேர்மங்களும் சூரிய ஒளியாலும் , அதிகப்படியான மாசுபாடு போன்றவற்றால்  ஏற்படும் சேதங்களிலிருந்து நமது தோல் செல்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது சரும செல்களின் டியோக்ஸைரிபோனூக்ளிக் ஆசிட் (டி.என்.ஏ) சிதைவதை அவை தடுக்க முடியும் என்பதால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, நமது தசை நார்களின் நெகிழ்ச்சி அதிகரிக்கும். இதன் விளைவாக, முன்கூட்டிய வயதாகும் தோற்றத்தை நாம் திறம்பட தவிர்க்க முடியும்.

இந்த சிறிய மற்றும் சக்தி வாய்ந்த பழங்கள் இரும்புச் சத்து நிறைந்தவை, இது நம் உடலுக்கு ஒரு முக்கியமான மற்றும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். ,இது  உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை பராமரிப்பதற்கும், மயிர்க்கால்களைத் தூண்டுவதற்கும், முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் இந்த உலர்ந்த திராட்சைகள் உதவுகின்றனர்.

உலர்ந்த கருப்பு திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள்      493

மொத்த கொழுப்பு       1%

சோடியம் 28mg               1%

கார்போஹைட்ரேட் 130g          43%

நார்ச்சத்து 8g    32%

புரதம்  10%

வைட்டமின் சி            10%

இரும்பு            19%

தையாமின்      8%

நியாசின்         8%

போலேட்         2%

மெக்னீசியம்   13%

கால்சியம்        7%

வைட்டமின் ஈ 1%

ரைபோபிளேவின்       16%

வைட்டமின் பி 6            19%

பாஸ்பரஸ்       16%

துத்தநாகம்      3%