குண்டான உடம்பை கண்ணாடியில் பார்த்து காண்டாகுறிங்களா -எடை குறைக்கும் எலுமிச்சை டயட்

 

குண்டான உடம்பை கண்ணாடியில் பார்த்து காண்டாகுறிங்களா -எடை குறைக்கும் எலுமிச்சை டயட்

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய எலுமிச்சை டயட்டை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய எலுமிச்சை டயட் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, எலுமிச்சை டயட்டை பின்பற்றினால் மிகவும் ஈஸியாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

குண்டான உடம்பை கண்ணாடியில் பார்த்து காண்டாகுறிங்களா -எடை குறைக்கும் எலுமிச்சை டயட்

இப்போது எலுமிச்சை டயட்டை மேற்கொள்ளும் போது, என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

திட உணவுகள் கூடாது

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது, திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இவ்வாறு இருந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

கார உணவுகளை தவிர்க்கவும்

கார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். எனவே எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது அதிகமான கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிகமான நீர்மம்

எலுமிச்சை டயட்டில் இருக்கும் போது, கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.

தேன்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே லெமன் டயட்டில் இருக்கும் போது, இதனை சாப்பிடுவது இன்னும் நல்ல பலனைத் தரும்.

காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு, நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.

எலுமிச்சை-தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

லெமன் பை (Lemon Pie)

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சாலட்

சாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.