வெய்ட் லாஸ் பண்ண ரைட் சாய்ஸ் இந்த ஜூஸ் -தயாரிக்கும் முறை

 

வெய்ட் லாஸ் பண்ண ரைட் சாய்ஸ் இந்த ஜூஸ் -தயாரிக்கும் முறை

மிராக்கல் ஈஸி ஹோம்மேட் நோ ஃபேட் டிரிங்க் (No Fat Health Drink)

தேவையானவை

புதினா – 8 இலைகள்

எலுமிச்சை பழம் – 3

துருவிய இஞ்சி – 2 இன்ச்

வெய்ட் லாஸ் பண்ண ரைட் சாய்ஸ் இந்த ஜூஸ் -தயாரிக்கும் முறை

செய்முறை

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் நிறுத்தி விடவும்.

5 நிமிடங்கள் ஆறவிடவும்.

பாத்திரத்தில் துருவிய இஞ்சியைப் போட்டு அதில் சுடுநீரை ஊற்றவும்.

20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்

எலுமிச்சையை கழுவி மெலிதாக, ரவுண்ட் ரவுண்டாக அறிந்து கொள்ளவும்.

ஒரு பெரிய கண்ணாடி ஜாரில் ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை போடவும்.

மேலும் அதில் அறிந்த எலுமிச்சைகளை சேர்க்கவும்.

இதே ஜாரில் இஞ்சி தண்ணீர், துருவிய இஞ்சியையும் சேர்த்து ஊற்றவும்.

அந்த ஜார் முழுவதும் தண்ணீர் ஊற்றி, ஸ்பூனால் கலக்கவும்.

இதை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் குடித்து வரலாம்.

அல்லது ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்து 2 மணி நேரம் கழித்து குடிக்கலாம்.

என்னென்ன விதிமுறைகள்?

வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்கவும்.

இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.

மாலை நேர டிரிங்காக குடிக்கலாம்.

காலை 11.30 மணிக்கு குடிக்கலாம்.

மாலை 3 அல்லது 4 மணிக்கும் குடிக்கலாம்.

இரவில் செய்து அடுத்த நாள் குடிக்கலாம்.

பிரசவத்துக்கு பிறகான 6 மாதத்திலிருந்தே குடிக்கத் தொடங்குங்கள்.

பலன்கள்

வெயிட் லாஸ் கை கூடும். விரைவில் குறைக்க உதவும். தினமும் குடிக்கலாம்.

அதிக பசியை விரட்டும்.

செரிமானத்துக்கு உதவும்.

ஜிஞ்சரால் இருப்பதால், கொழுப்பை கரைக்கும்.

கழிவுகளை வெளியேற்றும்.

இயற்கையாகவே பசியை அடக்கும்.

உடலைக் குளிர்ச்சியாக்கும்.