கோடையில் ,காலையில் தங்கு தடையில்லாம டாய்லெட் போக வைக்கும் நுங்கு .

 

கோடையில் ,காலையில் தங்கு தடையில்லாம டாய்லெட் போக வைக்கும் நுங்கு .

நுங்கு நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவென்பதால் சிறந்த  இயற்கை மலமிளக்கி உணவாக இருக்கிது. வயிறு மற்றும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் செய்கிறது. இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்ட ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.

கோடையில் ,காலையில் தங்கு தடையில்லாம டாய்லெட் போக வைக்கும் நுங்கு .

பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் முதன்மையாக இருப்பது மார்பக புற்று நோய் ஆகும். இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பெண்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, நுங்கையும் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். இதில் இருக்கும் “ஆன்தோசயனின்” எனப்படும் வேதி பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது

நுங்கு சாப்பிட்டால் வியர்க்குரு மறையும் .அதோடு அவ்வபோது வியர்க்குருவின் மீது நுங்கு தடவி வந்தாலும் வியர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்புளங்களும் கூட நுங்கு தடவி பூசுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் சரியாகும். மீண்டும் இவை வரவும் செய்யாது.