Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கொளுத்தும் கத்திரி வெயிலில் ஆஸ்பத்திரிக்கு அலையாமலிருக்க அதை கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுங்க.

கொளுத்தும் கத்திரி வெயிலில் ஆஸ்பத்திரிக்கு அலையாமலிருக்க அதை கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுங்க.

கொளுத்தும்  கத்திரி வெயிலில் ஆஸ்பத்திரிக்கு அலையாமலிருக்க அதை கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுங்க.

கத்திரி வெயிலில் செரிமானக்கோளாறுகளை மனதில்கொண்டு ஃபாஸ்ட்புட் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்ல சூடான, காரம் நிறைந்த மசாலா உணவுகளை உண்ணாமலிருப்பதும் நல்லது. பரோட்டா, சிக்கன் குருமா, சிக்கன் 65, இறால் மீன் குழம்பு, நண்டுக்குழம்பு எனக் காரசாரமான உணவுகளைக் கூடியமட்டும் தவிர்ப்பது நல்லது. இவை வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் அவற்றை ஒதுக்கி வைப்பது நல்லது

கொளுத்தும்  கத்திரி வெயிலில் ஆஸ்பத்திரிக்கு அலையாமலிருக்க அதை கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுங்க.

கத்திரி வெயிலில் சுடச்சுட காரமான உணவுகளை உண்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அது காலராவா இருக்குமோ? வேறு ஏதாவது நோயாக இருக்குமோ? என்று தேவையில்லாமல் பயப்பட வேண்டியிருக்கும். ஆகவே கத்திரி வெயில் காலங்களில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு கொரானா மற்றும் கோடை விடுமுறை என்பதால் அவர்கள் நண்பர்களோடு நல்ல ஆட்டம் போடும் நேரமும் இதுதான். கத்திரி வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. நிழலில் விளையாட அனுமதிக்கலாம்

கத்திரி வெயிலில்  தினமும் இரண்டு தடவையாவது குளிப்பது நல்லது. தண்ணீருடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குளிக்கலாம் வாரம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வருவது நல்லது.

எண்ணெய்க்குளியல் உடல்சூட்டைத் தணிப்பதோடு கழுத்து மற்றும் கை-கால் வலியைப்போக்கக்கூடியது. மேலும், உடலில் கொப்புளம், கட்டி ஏற்படுவது தடுக்கப்படுவதோடு வியர்வை நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும், தொடை இடுக்குகளில் தோல் நோய் பாதித்தால் உள் ஆடைகளை நன்றாகத் துவைத்து சுடுநீர் மற்றும் கிருமிநாசினிகள் கலந்த நீரில் அலசுவது நல்லது.

கத்திரி வெயிலில் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பாலியஸ்டர் உள்ளிட்ட ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாகப் பருத்தியால் ஆன ஆடைகள் அணியலாம்.

அழுக்கான மற்றும் வியர்வை நிறைந்த ஆடைகளை நன்றாகத் துவைத்து உடுத்துவது நல்லது. வெயிலில் செல்லும்போது குடை, தொப்பிப் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஓய்வு நேரங்களில் மரங்களின்கீழே இளைப்பாறுவதை வழக்கமாகப் பின்பற்றுங்கள்.

 கத்திரி வெயிலில் குழந்தைகளை விளையாட விடுவதினால் உடல் சூடாகி விடும். பின் வெயிலினால் மஞ்சள்காமாலை, வயிறு வலி, வயிற்றுப் போக்கு என பல நோய்கள் வந்து விடும். குழந்தைகளுக்கு வெயில் நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்ல வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை குழந்தைகளை குளிக்க வைப்பது நல்லது.குழந்தைகளுக்கு வெயில் நேரங்களில் நல்ல உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

கொளுத்தும்  கத்திரி வெயிலில் ஆஸ்பத்திரிக்கு அலையாமலிருக்க அதை கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுங்க.
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews