சர்க்கரை நோயாளிகளின் பலநாள் காயத்தை, மாயமாக மறைய செய்யும் இந்த மூலிகை

 

சர்க்கரை நோயாளிகளின் பலநாள் காயத்தை,  மாயமாக மறைய செய்யும் இந்த மூலிகை

குங்கிலியத்தைக் கொண்டு, குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய பற்பம், குங்கிலியத் தைலம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக் கூடிய கருமருது மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படுகின்றது.

கருமருது மரத்தினைக் கீறி, வடு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின் சேகரிக்கப்படுகிறது. இது உறைந்து, மருத்துவத்தில் பயன்படும் குங்கிலியமாகிறது. குங்கிலியம் காய்ந்த நிலையில், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குங்கிலியத்திற்கு, குக்கில், குக்கிலியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இது கற்பூரத் தைலத்தில் கரையும்.

ஆயுர்வேத மருந்துகடைகளில் குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய தைலம், குங்கிலிய பற்பம் போன்றவை கிடைக்கும். சர்க்கரை நோயால் உண்டாகும் புண் கட்டுப்படாமல் தீவிரமாகாமல் இருந்தால் அதை குணப்படுத்த குங்கிலியம் உ தவும்.

சர்க்கரை நோயாளிகளின் பலநாள் காயத்தை,  மாயமாக மறைய செய்யும் இந்த மூலிகை

குங்கிலியம் தேன் மெழுகு இரண்டையும் 100 கிராம் அளவு எடுத்து மெல்லிய தீயில் உருக்கி அரை லிட்டர் நல்ல்லெண்ணெயில் காய்ச்சவும். இவை நன்றாக காய்ந்ததும் காசுக்கட்டி, கந்தகம், வெங்காரம் 5 கிராம் எடுத்து பொடியாக்கி போட்டு ஆறியதும் வடிகட்டி விடவும். இதை வெள்ளைதுணியில் நனைத்து புண்களின் மீது தடவி போட்டு வந்தால் புண்கள் ஆறக்கூடும்.

இந்த குங்கிலியத்தை சந்தனக்கட்டை சிறு துண்டு சேர்த்து நெருப்பில் போட்டு வைத்தால் வரும் புகை வீட்டில் இருக்கும் விஷ காற்றை சுத்தம் செய்யும். நோயாளிகளுக்கு இதன் புகை உற்சாகத்தை கொடுக்கும். குங்கிலியம் நன்மைகளை பார்க்கலாம்.

மூட்டு வலி பிரச்சனையை வயதானவர்கள் மட்டும் அல்ல, இன்று இளவயதினரும் கூட எதிர்கொள்கிறார்கள். கை மூட்டு, கால் மூட்டு என்று வலி உபாதையால் அதிக சிரமத்தை சந்திக்கிறார்கள். இந்த மூட்டுவலி உபாதைக்கு என மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்று இந்த குங்கிலியம் சேர்த்து தயாரிக்கும் எண்ணெயும் கூட. இது மூட்டுவலிக்கு பலனும் அளிக்கும்.

குங்கிலியம் 100 கிராம் தூள் செய்து வைக்கவும். சுத்தமான அரை லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு இந்த தைலத்தை தயாரிக்கலாம். நல்லெண்ணெய் இலேசாக சூடாக்கி அடில் குங்கிலியம் தூள் கலந்து இறக்கி வைக்கவும். இதை ஆறவிட்டு மூட்டுக்கு இரவு நேரங்களில் இலேசாக சூடு செய்து தடவி வந்தால் வலி உபாதை குறையக்கூடும். இதனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கூட சில காலங்களுக்கு தள்ளிபோடலாம்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பொதுவானது. இது மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு மாதவிடாய் சுழற்சிக்கு பின்பு வரக்கூடும். இது பெண் உறுப்பை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இயற்கையாக சுரக்க கூடியவை. ஆனால் இது அதிகமாக சுரந்தால் வெள்ளைப்படுதல் வேறு உபாதையை உண்டாக்கிவிடும்.

பசு நெய் விட்டு அதில் 10 கிராம் பொரித்து சிறிது தண்ணீர் விட்டு குழைத்து நன்றாக காலை, மாலை உணவிற்கு முன் உள்ளுக்கு சிறிது சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல் குணமாகும். தொடர்ந்து ஒரு மண்டலம் வரை இதை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

1 கிராம் குங்கிலியத்தைத் தூள் செய்து, 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க இருமல், மார்புச் சளி, இரத்த மூலம் கட்டுப்படும்.