உங்கள் அங்கம், தங்கம் போல தக தகன்னு ஜொலிக்க வைக்கும் சில பொருட்கள்.

 

உங்கள் அங்கம், தங்கம் போல தக தகன்னு ஜொலிக்க வைக்கும்  சில பொருட்கள்.

இந்த கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் பல நமக்கு தோன்றும் .அந்த சரும பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலிருக்கும் எளிய பொருட்களை வைத்து குணப்படுத்தும் வழிகளை பார்க்கலாம் 

உங்கள் அங்கம், தங்கம் போல தக தகன்னு ஜொலிக்க வைக்கும்  சில பொருட்கள்.

சந்தனம்

எளிதில் கிடைக்கக் கூடிய சந்தனம் நம் சருமத்தைப் பொலிவாக்கி , குளிர்விக்கும் தன்மைகளைக் கொண்டது. சீரற்ற சரும நிறம், மாசு மங்கல்கள் போன்றவற்றை சரிசெய்ய மிகவும் ஏற்றது.சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கவும், வெயில் பட்டு ஏற்பட்ட புண்களை குணமாக்கவும் இது உதவுகிறது.

உங்கள் அங்கம், தங்கம் போல தக தகன்னு ஜொலிக்க வைக்கும்  சில பொருட்கள்.

கஸ்தூரி மஞ்சள்

மஞ்சளுக்கு, ஆண்டி-பாக்டீரியல் குணம்  இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது. அது போலவே மஞ்சள் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளைப் போக்கவும் திறம்பட செயலாற்றக் கூடியது. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில், சருமத்திற்கு பொலிவையும் கூட்டுகிறது. வழக்கமான மஞ்சளுக்கும் கஸ்தூரி மஞ்சளுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, கஸ்தூரி மஞ்சள் வழக்கமான மஞ்சளைப் போல சருமத்தில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தாது.

ரோஜா இதழ் பொடி

அழகுக்கு ரோஜாக்களின் பயன்படுத்துவது  பல நூற்றாண்டுகளாக, உலகின் பல்வேறு இடங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தப் பொடி உடனடியாக நமக்கு புத்துணர்வு அளித்து, சருமத்தைக் குளிர்வித்து, பளிச்சென்று மாற்றுகிறது. இதன் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள், உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராடி, சருமத்திற்கு முதிய தோற்றம் சீக்கிரம் வருவதை தடுக்கும் 

கற்றாழை

பல பயன்பாடுகளைக் கொண்ட, இதமளிக்கும் ஜெல் இது.கற்றாழை  சருமத்திற்கு சிறப்பாக பலனளிக்கும், சிறிய வெட்டுகள் அல்லது புண்கள் இருந்தாலும் குணப்படுத்தும் . . எளிதில் சிவந்துப் போகும் சென்சிட்டிவ் சருமத்திலும் கூட நன்கு செயல்பட்டு, குளிர்ச்சி தரும், எரிச்சலைப் போக்கும் பண்புகளைக் கொண்டது.

வேப்பிலை

மருத்துவ மூலிகையான வேப்பிலை, பருக்களை எதிர்த்து போரிட ஒரு சிறந்த மூலிகையாகும். இதிலுள்ள சுத்தம் செய்யும் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள், சருமத்திற்கு நல்லது. அம்மையுள்ள இடங்கள் மற்றும் பருக்களின் மேல் வேப்பிலை எண்ணெய் அல்லது பவுடரையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.