முகப்பரு இல்லாம முகம் பொலிவா ,தெளிவா ,ஒளி வீச செய்யும் அரண்மனை சிகிச்சை

 

முகப்பரு இல்லாம முகம் பொலிவா ,தெளிவா ,ஒளி வீச செய்யும் அரண்மனை சிகிச்சை

கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான்.

முகப்பரு இல்லாம முகம் பொலிவா ,தெளிவா ,ஒளி வீச செய்யும் அரண்மனை சிகிச்சை

உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து உங்கள் முக அழகை பாழாக்கி விடும். இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தாவிட்டால் அதிகமாக முகப்பருக்கள் வந்துவிடும்.

அந்தவகையில் முகப்பருக்களைப் போக்க ஒரு சில இயற்கை வழிகளை இங்கு பார்ப்போம்.

எலுமிச்சை புல் எண்ணெயை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும். இதில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.

கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும்.

சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.

புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.