மூல நோயால் காலம் பூரா அவதிப்படுறவங்க, முக்காமல் போக முக்கி …ய தகவல்

 

மூல நோயால் காலம் பூரா அவதிப்படுறவங்க, முக்காமல் போக முக்கி …ய தகவல்

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

மூல நோயால் காலம் பூரா அவதிப்படுறவங்க, முக்காமல் போக முக்கி …ய தகவல்

இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதனை மருந்துகள் மாத்திரைகள் கொண்டும் கூட எளிய முறையில் சரி செய்ய முடியும். இருப்பினும் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி ஒரு சில உணவுகள் மூலம் சரி செய்யலாம்.

உணவு முறைகள்

சேனைக்கிழங்கு அதிகளவில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு, ஓட்ஸ், கோதுமை, பேரிக்காய், தவிடு, கேரட் போன்றவை 25 முதல் 30 கிராம் வரை சாப்பிட வேண்டும். 6 முதல் 7 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். இஞ்சி, புதினா, நார்த்தை, எலுமிச்சையுடன் தேன் சேர்த்து அருந்தலாம். பப்பாளி, மாக்கொண்டை, எள், பாவைக்காய், முள்ளங்கி, உள்ளி (சின்ன வெங்காயம்) உணவில் அதிகம் சேர்க்கலாம். கொத்தமல்லி நீர் அருந்தலாம்.

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டு வைத்தியம் மோருடன் சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடலாம். வெங்காயசாற்றுடன் சீனி கலந்து சாப்பிடலாம். ஆப்பசோடாவை வெளி மூலத்தில் வைக்கலாம். மோருடன் வேப்பம் இலை பிழிந்து தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு டீஸ்பூன் வெந்தயம் அரை கப் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். மோருடன் ஒரு டீஸ்பூன் ஓமத்தை சிறிது உப்பு கலந்து சாப்பிடலாம்.

கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் உட்கார வேண்டாம், அதை கட்டாயமாக்கவும் வேண்டாம். அதேவேளையில் காலை கடன் கழிப்பது போன்ற  வேலைகளை தவிர்க்காமல் எப்போதும் கவனித்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் பருத்தி உட்புற ஆடைகளை மட்டுமே அணியுங்கள்.

மலம் கழித்தலின் போது, ​​எளிமையாக கழிவுகளை அகற்றும் வகையில் குடல் அசைவிற்கு ஒத்துழைக்குமாறு அமருதல் வேண்டும்.