பெண்களே ! அந்த மூன்று நாட்களை ,ஆனந்தமான நாட்களாக மாற்ற இதை செய்யுங்க

 

பெண்களே ! அந்த மூன்று நாட்களை ,ஆனந்தமான நாட்களாக மாற்ற இதை செய்யுங்க

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

பெண்களே ! அந்த மூன்று நாட்களை ,ஆனந்தமான நாட்களாக மாற்ற இதை செய்யுங்க

தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும். கை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும்.

முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும். மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும்.

பெண்களே ! அந்த மூன்று நாட்களை ,ஆனந்தமான நாட்களாக மாற்ற இதை செய்யுங்க

இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்தவேண்டிய இடம் : தொடைப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனம் செலுத்தவும். பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும்.

அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். சில நாட்களுக்கு பிறகு வளையும் தன்மை அதிகரித்து , தரையை தொடும் நிலை கைகூடும். இதை ஆண்களும் செய்யலாம் .ஆண்களுக்கான பயன்கள்: விரைவாதம் , மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் வலியை குறைக்க சில டிப்ஸ்..!

உணவுக்கு பிறகு விட்டமின் பி மற்றும் கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம்.இவை உங்கள் மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.

மாதவிடாய் நாட்களில் அரிசி உணவோடு மீன்,சிக்கன்,காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் காலங்களில் வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட பையை,அடிவயிற்றில் வைத்தால் வலி சற்று குறைய வாய்ப்புள்ளது.

உங்கள் மாதவிடாய் காலத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் யோகா மற்றும் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

தினந்தோறும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர மாதவிடாயின்போது ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

நாம் உண்ணும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம் ஆகும். . மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெந்தயத்தை சிறிது முழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி கட்டுப்படும்.

புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும். 

ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.