மாதவிடாய் நாட்களை ,மகிழ்ச்சியான நாட்களாக மாற்ற உதவும் மூலிகை

 

மாதவிடாய் நாட்களை ,மகிழ்ச்சியான நாட்களாக மாற்ற உதவும் மூலிகை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலவிதமான அசெளகரியங்களை எதிர்கொள்கிறார்கள். அதில் ஒன்று உடல் உபாதை. வயிறு வலி, அடிவயிறுவலி, இடுப்பு வலி, பெண் உறுப்பில் வலி, தொடை வலி, மார்பு வலி என வயதுக்கேற்ப ஒவ்வொரு விதமான வலியை எதிர்கொள்கிறார்கள்.

மாதவிடாய் நாட்களை ,மகிழ்ச்சியான நாட்களாக மாற்ற உதவும் மூலிகை

மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு ஏற்படும் வலி போன்ற உணர்வுகளை யாராலும் சரியாக கணித்துவிட முடியாது. நம்மால் இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாது, அதனுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்பதே இதற்கான ஒரே வழி.

உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களின் மாதவிடாய் சுழற்சி சரிசெய்யப்பட்டு சீராகும். வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களும், கர்ப்பம் மற்றும் பெரிமெனோபாஸ் போன்ற அனுபவங்களுமே, பெண்களை, மாதவிடாய் காலத்திற்கு தங்களை பழக்கிக்கொள்ள பேருதவி புரிகின்றன. மாதவிடாய் சுழற்சி குறித்த புரிதல் நமக்கு முழுவதுமாக புரிய, குறிப்பிட்ட வயதை நாம் கடந்திருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய அனுபவங்கள் சொல்லி தெரிவதில்லை. அவரவர்கள் அந்தந்த வயதுகளில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்தே தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் வயிறுவலியை உண்டாக்கும் இந்த மாதவிடாய் சுழற்சி காலத்தில் வலியை தவிர்க்க முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்தலாம். அதேபோன்று அதிக உதிரபோக்கையும் கட்டுப்படுத்தும் மாதுளை இலை அருகம்புல் வைத்தியம் குறித்து தெரிந்துகொள்வோம்.

​அருகம்புல் மாதுளை இலை வைத்தியம்

தேவை

அருகம்புல் – 10 கிராம்

மாதுளை இலை – 10 கிராம்

இரண்டையும் 100 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து 50 மில்லியாக மாறும் வரை வைத்து இறக்கி வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும். தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் காலை, மாலை என இரண்டு வேளை மாதவிடாய் கால நாட்களில் தொடர்ந்து 5 நாட்கள் வரை குடிக்கலாம். இதே போல் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் குடித்து வர வேண்டும்.

வெறும் வயிற்றில் காலையில் குடித்து அரை மணி நேரம் கழித்து தான் மற்ற பொருள்களை எடுக்க வேண்டும். மாலையில் இதை குடிப்பதற்கு முன்பு 1 மணி நேரமும், அதற்கு பின்பு 1 மணி நேரமும் எதையும் சாப்பிட கூடாது. இப்படி செய்து வந்தால் மாதவிடாய் நேர உதிரபோக்கும், வயிறுவலியும் தீவிரமாகாமல் கட்டுக்குள் கொண்டு வரும்.

உதிரபோக்கை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் இருக்கும் போது பெண் உறுப்பில் அலர்ஜி, அரிப்பு நமைச்சல் போன்றவை உண்டாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள். சிலர் நீண்ட நேரம் நாப்கினை மாற்றாமல் இருக்கலாம், நீண்ட நேரம் உறுப்பினுள் டேம்பன் வைத்திருக்கலாம். இவற்றை மாற்றும் போது பெண் உறுப்பை சுத்தம் செய்யாமல் அப்படியே வேறு மாற்றலாம். இதனால் கூட அரிப்பும் நமைச்சலும் உண்டாகும். இவை தொடரும் போது மன உளைச்சலையும் உண்டாக்கும்.

சமயங்களில் உரிய இடைவெளியில் உரிய சுத்தத்தோடு இதை மாற்றினாலும் அரிப்பு, நமைச்சல் வந்தால் அவை நீங்கள் பயன்படுத்து பொருள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் காரணமாக இருக்கலாம். அதனால் உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் இந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்களா என்பதை ஒவ்வொரு மாதவிடாய் கால நாட்களிலும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

​உள்ளாடை சுத்தம்

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தனி உள்ளாடையை பயன்படுத்துவது மேலும் பாதுகாப்பானது. இந்த நாட்களில் உள்ளாடையை துவைக்கும் போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதோடு வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். இதனால் கிருமி தொற்று உண்டாகாது.