வாலிபர்களே !கல்யாணம் ஆனதும் அப்பாவாக ,இப்பவே தப்பாம இந்த பழத்தை சாப்பிடுங்க .

 

வாலிபர்களே !கல்யாணம் ஆனதும் அப்பாவாக ,இப்பவே தப்பாம இந்த பழத்தை சாப்பிடுங்க .

பொதுவாக ஜீன்ஸ் பேண்ட் போடுவதாலும் இரவில் அதிகம் கண் விழிக்கும் பழக்கத்தாலும்,கம்ப்யூட்டர் அதிகமாக உபயோகிப்பதாலும்  இன்றைய வாலிபர்கள் பலருக்கு  உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது .இப்படி உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஸ்ட்ராபெரி  பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது.

வாலிபர்களே !கல்யாணம் ஆனதும் அப்பாவாக ,இப்பவே தப்பாம இந்த பழத்தை சாப்பிடுங்க .

ஸ்ட்ராபெரி  பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஸ்ட்ராபெரி  பழங்களில் வைட்டமின்-சி, தையமின், வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

 நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.  அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் எலும்புகளில் இருக்கும் காரைகள் மிகவும் வலுவடையச் செய்து, சுலபத்தில் எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

 சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்த்து அதிகம் பழங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நல்லது. ஸ்ட்ராபெரி பழங்களில் நிறைந்திருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்துகிறது.