உருமாறி வரும் கொரானாவிடமிருந்து நுரையீரலை காக்கும் புதுமாதிரி முறைகள்

 

உருமாறி வரும் கொரானாவிடமிருந்து நுரையீரலை  காக்கும் புதுமாதிரி முறைகள்

உயிர்களின் அடிப்படை ஆதாரமாக இருப்பது சுவாசம். அதை முறைப்படுத்தும் உறுப்பு தான் நுரையீரல். ஆரோக்கியமான உடலுக்கு மூச்சுத்திணறல் உண்டாகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆஸ்துமா , புகைப்பழக்கம், COPD என்னும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்றவை அவற்றில் சில காரணங்கள் ஆகும். இந்த பாதிப்புகளில் ஏதேனும் ஒன்று காரணமாக நீங்கள் அவதிப்பட்டால், உங்கள் நுரையீரல் திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியம்.

உருமாறி வரும் கொரானாவிடமிருந்து நுரையீரலை  காக்கும் புதுமாதிரி முறைகள்

காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். உருமாறி வரும் கொரானாவிடமிருந்து நுரையீரலை  காக்கும் புதுமாதிரி முறைகள் என்று அறிந்து கொள்ளலாம்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை

நுரையீரல் பாதிக்கப்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பின்னடைவை எதிர்கொள்ளும். காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். சுவாச பிரச்சனைகளும் நுரையீரலை பலவீனப்படுத்தும். அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தவகை மீன்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுத்துவிடலாம். வாரம் இருமுறையாவது மீன் சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் ஆன்டிஆக்ஸிடென்டு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். செரிமான பிரச்சனையும் சரியாகும்.

கீரைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவும். உணவில் அடிக்கடி கீரை சேர்த்து கொண்டால் நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.

நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு கோதுமையும் துணைபுரியும். அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோதுமையில் வைட்டமின்-இ அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதும் அவசியமானது. அதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. வேகவைக்காமல் அப்படியே சாப்பிடலாம். தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் குறையும்.

உங்கள் நுரையீரலின் திறனை மேம்படுத்த மூச்சுப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். பல்வேறு வகையான மூச்சுப்பயிற்சிகள் உள்ளன. உதரவிதான சுவாசம், இதழ்கள் குவிக்கும் சுவாசம், பிராணாயாமம் போன்றவற்றை நீங்கள் முயற்சிக்கலாம். மூச்சு சம்பந்தமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் நுரையீரல் திறன் மேம்படும். இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.