நுரையீரலை காக்க முறையா ஆவி புடிங்க -செம பவர்னு சொல்ல இந்த தவறை செய்யாதிங்க

 

நுரையீரலை காக்க முறையா ஆவி புடிங்க -செம பவர்னு சொல்ல இந்த தவறை செய்யாதிங்க

ஆவி பிடிக்கும் வழி :

கொதிக்க வைத்த நீரை மண் சட்டியில் ஊற்றி கொள்ளவும். முதலில் வேது பிடிக்க முகத்தின் பின்பக்கமாக போர்வையை மூடி விட வேண்டும். முகம் மற்றும் கழுத்துபகுதிகளில் கனமான போர்வையை மூடிவிட வேண்டும். மண்சட்டியிலிருந்து வரும் ஆவியானது வெளியில் பரவாமல் முழுக்க முழுக்க முகத்தின் மீது மட்டுமே படியவேண்டும். சூடாக முகத்தில் ஆவி படியும் போது சருமத்துளைகளும் வேகமாக திறக்க தொடங்கும். ஆனால் நீராவிக்கு முகத்தை காண்பிப்பதற்கு முன்பு முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இல்லையெனில் சருமத்தில் எரிச்சலும், அரிப்பும் உண்டாகும். முகத்தை சுத்தம் செய்து வேது பிடிக்க அரைமணி நேரம் முன்பே முகத்தை உலரவிட வேண்டும்.

நுரையீரலை காக்க முறையா ஆவி புடிங்க -செம பவர்னு சொல்ல இந்த தவறை செய்யாதிங்க

ஆவி பிடிக்க  5 முதல் 10 நிமிடங்கள் வரை போதுமானது. முகத்தில் பருக்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு அவை அதிக எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடும். அதனால் அதிக நேரம் கூடாது.

நீராவி பிடிக்கும் போது முகத்தின் இரண்டு பக்கங்களிலும் கன்னங்களை நன்றாக திருப்பி திருப்பி காண்பிக்க வேண்டும். மூக்கு நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பக்கம் நன்றாக காண்பிக்க வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து நீராவி பட்டால் அந்த இடம் சிவப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கிவிடும். அதனால் இருபுறமும் திருப்பி திருப்பி காண்பிக்க வேண்டும்.

சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய  கிருமிகள் வெளியேறிவிடும்.

நல்ல சூடான ஆவியை சுவாசிக்க அந்த ஆவி  நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.

மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.