நுரையீரலுக்கு நண்பனாகவும் ,கல்லீரலுக்கு காவலனாகவும் விளங்கும் இதை வறுத்து சாப்பிடுங்க

 

நுரையீரலுக்கு நண்பனாகவும் ,கல்லீரலுக்கு காவலனாகவும் விளங்கும் இதை வறுத்து சாப்பிடுங்க

சீரகம், கல்லீரல், செரிமானம் மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பாரம்பரிய மருந்தாக இன்னும் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் விதைகள் ஆண்டிசெப்டிக், தூண்டுதல், உயர் இரத்த அழுத்த எதிர்ப்புடன் கூடிய சக்திவாய்ந்த கார்மினேட்டிவ் ஆகும்.

.

நுரையீரலுக்கு நண்பனாகவும் ,கல்லீரலுக்கு காவலனாகவும் விளங்கும் இதை வறுத்து சாப்பிடுங்க

சீரகம் விதைகளின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, சீரகம் அதன் தனித்துவமான சுவையை பல்வேறு இந்திய கறிகளுக்கு வழங்குகிறது. இது அரிசி மற்றும் பயறு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.  அவசியமான மசாலாப் பொருட்களில்  சீரகம் ஒன்றாகும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் சீரகமும் ஒன்று. இந்த சீரகம்,  நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது. இந்த சீரகத்தின் பயனை இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவருமே நன்கு அறிவர். சீரகம் பார்ப்பதற்கு ஓமம் போன்று இருந்தாலும், இதன் வாசனை & சுவை வேறுபட்டு காணப்படும்.

வறுத்த சீரக பொடி 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

 கால் டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து கால் டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து தினமும் 1 முதல் 2 முறைகுடிக்கவும்.

சளி மற்றும் காய்ச்சலை போக்கும் சீரகம்

சீரகத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு & பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமக்கு ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது.

 தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தூக்க பிரச்சனைகளையும் போக்கலாம்.

  சீரகத்தை வறுத்து சூடான நீரில் கலக்கவும். பின்னர் அதை மீண்டும் கொதிக்க வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம். இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.

 சீரகத்தை தினமும் உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தும். இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிக்க செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.

குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.

திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.