எல்லா கம்யூனிட்டிக்கும் இம்யூனிட்டி பவரை கொடுக்கும் இந்த சட்னி .

 

எல்லா கம்யூனிட்டிக்கும்  இம்யூனிட்டி பவரை கொடுக்கும் இந்த சட்னி .

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் பூண்டு சட்னி ,சுவையான மற்றும் பிரபலமான சைட் டிஷ்ஷாக இருப்பதோடு, இந்த சட்னி ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

இம்யூனிட்டி பவரை கூட்டும்   இந்த  சுவையான தக்காளி பூண்டு சட்னியின்  செய்முறையை இங்கே குறிப்பிடுகிறோம்.

எல்லா கம்யூனிட்டிக்கும்  இம்யூனிட்டி பவரை கொடுக்கும் இந்த சட்னி .

தேவையானப் பொருட்கள்

1 – தக்காளி

4 – பூண்டு பற்கள்

1 – பச்சை மிளகாய்

1/2 தேக்கரண்டி –  எண்ணெய்

ஒரு சிட்டிகை – உப்பு

ஒரு சிட்டிகை – சர்க்கரை

செய்முறை

ஒரு வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.

பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.

இறுதியாக உப்பு சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்தால் அந்த சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

தக்காளி, வைட்டமின்கள் மற்றும் குளுடாதியோனை தருகிறது. அதோடு புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

ப்ரீ பயாடிக், ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை பூண்டுக்கு உண்டு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் :

இஞ்சி

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி, ஓட்ஸ்

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.