உச்சி வெயில்லேயும் ஊட்டியில் இருக்கிற மாதிரி, உடலை குளிச்சியாக வைக்கும் இந்த காய் .

 

உச்சி வெயில்லேயும் ஊட்டியில் இருக்கிற மாதிரி, உடலை குளிச்சியாக வைக்கும் இந்த காய் .

உச்சி வெயில்லேயும் ஊட்டியில் இருக்கிற மாதிரி, உடலை குளிச்சியாக வைக்கும் இந்த காய் .

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். இது சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே பிரச்சினை உண்டு. இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

சுரைக்காயின் இலைகளைச் சமைத்து சாப்பிடலாம். அல்லது, சுரைக்காய்ச் சாறு மற்றும் நல்லெண்ணெய் கலந்து இரவு படுக்கைக்கு முன் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் தூக்கம் நன்கு வரும்.

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும்.