உச்சி வெயில்ல போறவங்களை உச்சி குளிர செய்து ,பல வியாதிகளை விரட்டும் இந்த நீர்

 

உச்சி வெயில்ல போறவங்களை உச்சி குளிர செய்து ,பல வியாதிகளை விரட்டும்  இந்த நீர்

பத நீர் கோடைக் காலத்தில்தான்   அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை வாங்கி குடியுங்கள். இங்கு பதநீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உச்சி வெயில்ல போறவங்களை உச்சி குளிர செய்து ,பல வியாதிகளை விரட்டும்  இந்த நீர்

கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.

*பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும்.

*உடலுக்கு குளிர்ச்சி தரும்.

*கழிவு அகற்றியாகவும், வியர்வை அகற்றியாகவும் செயல்படும்.

*இதனுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.

*எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

* பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்பட்டு, ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் .

* பனைவெல்லத்தை மறந்து இன்று நாம் வெள்ளைச் சர்க்கரைக்கு மாறியதால், இன்று நம்மில் பலரும் சர்க்கரை நோய்க்கு ஆளாகியுள்ளோம்.

* பதநீர் அருந்தினால் கால்சியம் சம்பந்தப்பட்ட குறைகள் இருக்காது, பெண்களுக்கு கால் வலி இருக்காது. மாதவிடாய காலங்களில் இன்று சர்வ சாதாரணமாக பெண்களுக்கு வரும் குறைகள் வராது. முக்கியமாக பல் சம்பந்தப்பட்ட எந்தக் குறைகளும் இருக்காது.

* பதநீர் அருந்தி வந்தால், அவ்வளவு எளிதில் முடியும் நரைக்காது.

* பதநீர் வயோதிகத்திற்கு எதிரானது. இளமையாக இருக்கலாம். ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும். பதநீரில் இருக்கும் இரும்பு, கால்சியம், அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள் இந்தக் குறைபாட்டை நீக்கும்.

*வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

*பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்து புளிக்க வைத்து, ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் சீக்கிரம் குணமாகும்.