இதய நோய் வராமலிருக்க அப்பப்ப இதையும் சேர்த்துக்கோங்க .

 

இதய நோய் வராமலிருக்க அப்பப்ப இதையும் சேர்த்துக்கோங்க .

பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை  தடுக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

இதில் பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.இதில்  இரும்புச்சத்து இருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ரத்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது

இதில் மக்னீசியம், கால்சியம் சத்துகள் இருப்பதால் எலும்புகள் பலமடையும். ஆகவே குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்து வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் பார்வைக்குறைபாடுகள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும்.

பலாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால்  நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், இது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

பலாப்பழத்தில் இரத்தத்தில் சர்க்கரையை  குறைக்க  உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தின்  நேரத்தை குறைக்கிறது மற்றும் இரத்தத்தில்  சர்க்கரை அதிகமாவதை  தடுக்கிறது. மேலும்  நீரிழிவு நோயாளிகளுக்கு பலாப்பழம் ஒரு  சிறந்த உணவாகும் …மேலும் இந்த வைரஸ் தொற்று காலத்தில் பலாப்பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.