கொரானாகால மாரடைப்பை ,மூக்கடைப்பு மாதிரி ரொம்ப ஈஸியா விரட்டலாம் வாங்க .

 

கொரானாகால  மாரடைப்பை ,மூக்கடைப்பு மாதிரி ரொம்ப ஈஸியா விரட்டலாம் வாங்க .

மாரடைப்பு வராமல் தடுக்க காய்கறிகளை தாராளமாக உண்ணுங்கள்.உங்களது சாப்பாட்டு தட்டில் பாதியளவு ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து அல்லாத காய்கறிகள் இருக்கட்டும்.

கொரானாகால  மாரடைப்பை ,மூக்கடைப்பு மாதிரி ரொம்ப ஈஸியா விரட்டலாம் வாங்க .

பிறகு பிரட், உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் காய்கறிகள் போன்ற ஸ்டார்ச் உணவுகள் தட்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு இருக்கட்டும்.

கடைசி பங்காக மீன்,தோலுரித்த கோழி இறைச்சி மற்றும் கொழுப்பற்ற இறைச்சி போன்றவை இருக்கலாம். இது தவிர முழு தானிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.அதிலும் வெள்ளை அரிசிக்கு பதிலாக, பிரவுன் அரிசி, முழு தானிய அதாவது கோதுமை பிரட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறுக்குப் பதில் பழம்

நம்மில் பலரிடம் உட்கொள்வதற்கு சுலபமாக இருக்கிறது என்பதற்காக பழங்களை சாறாக, அதாவது ஜூஸ், அரைத்துக் குடிக்கும் வழக்கம் உள்ளது.

முழு பழத்தில் உள்ள அளவிற்கு பழச்சாறில் நார்ச்சத்து இல்லை. பழங்களை தவிர பீன்ஸ் வகையறாக்களிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ் பல வகைகளில் பலவிதமாக உள்ளது.இவை ஒவ்வொன்றிலுமே நார்ச்சத்து மிகுந்துள்ளது.

ஒமேகா-3எஸ் நிறைந்த மீன்களை அதிகம் சாப்பிடவும். சூரை, காலா, கானாங்கெளுத்தி, கொய்மீன் உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்ளவும்.

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட சத்தான கடலை வகைகளை சாப்பிடவும்.

ஸ்ட்ராபெரி, அவரிநெல்லி, குருதிநெல்லி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை சாப்பிடலாம்.

ஆளி விதைகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அவற்றை அரைத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.

ஓட்ஸ் பொதுவாக இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

தட்டைப்பயிறு, ராஜ்மா சுண்டல் உள்ளிட்ட பீன்ஸ் வகைகளில், நார்ச்சத்து, வைட்டமின் பி, மினரல் போன்றவை அதிகம் உள்ளதால், அவை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன.

தினமும் 4 அவுன்ஸ் ரெட் ஒயினை குடிக்கலாம். இது கொளஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.

காய்கறிகள் சேர்க்கப்பட்ட டோபுவையும் சாப்பிடலாம். இதுவும் இதயத்திற்கு ஆரோக்கியமானது.

நொறுக்கு தீனியிலும் நார்ச்சத்து

 நார்ச்சத்து அல்லாத கலோரி அதிகம் நிறைந்த நொறுக்கு தீனிகளுக்குப் பதிலாக கேரட், நறுக்கிய வெள்ளரி துண்டுகள், கொழுப்பு அல்லாத பாப்கார்ன் மற்றும் பழக் கலவை துண்டுகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு கேடு விளைவிக்காத இவற்றில் நார்ச்சத்தும் மிகுந்த அளவில் உள்ளது.