சீவினாலே முடி கொட்டினா , கொட்டிய இடத்தில் கொத்தா முடி வளர்ந்து கெத்தா போக வழி.

 

சீவினாலே முடி கொட்டினா , கொட்டிய இடத்தில் கொத்தா முடி வளர்ந்து கெத்தா போக  வழி.

சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா..

எந்தவொரு இடையூறும் இல்லாமல் முடி தன்னை வளர்த்துக் கொள்ள நிறைய நேரம் எடுக்கும். அரோக்கியமான தலைமுடியை பெறுவதற்கு மன இறுக்கமும், மன அழுத்தமும் ஆகிய இரண்டையும் சமாளிக்க வேண்டும். இளைய வயதில் மக்கள் முடி இழக்க அல்லது சேதமடைந்த மற்றும் நரை முடியை சமாளிக்க முனைகிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் உங்கள் தலைமுடிக்கு சரியான வழக்கத்தை பின்பற்றாததன் விளைவாகும்.

கடுகு எண்ணெய் மசாஜ்

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக்யைக் காணலாம்.

businessman wearing eyeglasses on white background - hair loss stock pictures, royalty-free photos & images

வெங்காய பேஸ்ட் மசாஜ்

வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறப்பான பலனைத் தரும். அதற்கு சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

முட்டை மஞ்சள் கரு

ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வர, சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.

வெந்தய மாஸ்க்

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அதன் பின் தலையை கடுமையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.

சீகைக்காய்

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயை 2 லிட்டர் நீரில் போட்டு, பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு வழக்கத்தையும் கடைப்பிடிப்பதற்கு முன், அமைதியாக இருக்கவும், நல்ல மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் தியானம் செய்வது அவசியம். இது உண்மையில் அனைவருக்கும் கடினமான நேரம், ஆனால் நாம் இன்னும் பாஸிட்டிவ்வாக இருந்து ஆரோக்கியமான உடலை பராமரிக்க முடியும். சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் சரியான சுகாதாரத்தை பின்பற்றுவதன் மூலம் இதை பராமரிக்க முடியும்.