கொய்யாப்பழத்துல கொரானாவுக்கான நிறைய நோய் எதிர்ப்பு சக்தி குவிஞ்சிருக்குதாமே ! -ஆச்சர்ய தகவல்

 

கொய்யாப்பழத்துல கொரானாவுக்கான நிறைய நோய் எதிர்ப்பு சக்தி குவிஞ்சிருக்குதாமே ! -ஆச்சர்ய தகவல்

கொய்யாப் பழத்தின் பல விதமான மருத்துவ‌ பயன்கள்:

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கொய்யாவின் வியக்க வைக்கும்  நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பின்வருமாறு.

கொய்யாப்பழத்துல கொரானாவுக்கான நிறைய நோய் எதிர்ப்பு சக்தி குவிஞ்சிருக்குதாமே ! -ஆச்சர்ய தகவல்

1) நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்தல்:

நமக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவை மட்டுமல்லாது நமது உடலில் நோயினை எதிர்த்துப் போராடும் திறனும் குறைவாக இருப்பதே ஆகும். இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செர்க்கப்படும் பழங்களில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பது கொய்யாப் பழம் ஆகும். கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது என்பது முற்றிலும் உண்மை.

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை கொய்யாப் பழம் கொண்டுள்ளது.

வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

​சருமம் வயதாகுவதை தடுக்கும் இயற்கை க்ரீம்

நம் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இருந்தால் முகழகே கெட்டு விடும். இதை போக்க நீங்கள் க்ரீம்கள் எல்லாம் தடவ வேண்டாம். சில கொய்யா இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளே செய்து வாருங்கள். இதன் ஆன்டி செப்டிக் தன்மை முகப்பருவிற்கு காரணமான பாக்டீரியாக்களை கொல்கிறது. சில வாரங்கள் இதை செய்தால் மாசு மருவற்ற முகத்தை பெறுவீர்கள்.

​கூந்தல் வளர்ச்சியை ஊட்டும் டானிக்

நமது கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான போஷாக்குகள், ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கொய்யா இலையில் இருக்கின்றனர். எனவே இந்த கொய்யா இலை சாற்றை உங்கள் கூந்தலில் அப்ளே செய்து காய வைத்து பின் அலசி வாருங்கள். மென்மையான அடர்த்தியான கூந்தலை பெறுவீர்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 20 முதல் 30 கொய்யா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவிடுங்கள். நன்கு ஆறிய பிறகு அந்த நீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்து தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் படும்படியாக ஸ்பிரே செய்யலாம். அல்லது நேரடியாக தலையை அலசப் பயன்படுத்துங்கள். இது வேர்க்கால்களைத் தூண்டி, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைத்தல்:

லைக்கோபீனே (Lycopene), க்வெர்செடின் (Quercetin ), வைட்டமின் ‘சி’ மற்றும் பிற பாலிபினால்கள் சக்தி வாய்ந்த ஆக்சினேற்றங்களாகச் செயல்படுகின்றன. இவை புற்றுநோய்க்காக் உருவாக்கப்படும் அடிப்படைக் கூறினை நடுநிலையாக்கி புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

நீரிழிவு நோய்:

கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் (Glycemic Index) குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன. குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

ஆரோக்கியமான இதயம்:

கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் மிகப் பெரிய பங்கினை அளிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பினைக் (குறையடர்த்தி லிப்போ புரதம்) குறைக்க கொய்யாப் பழம் பயன்படுகிறாது. இந்த அற்புதமான கொய்யாப் பழம் உடலின் நல்ல கொழுப்பினை (மிகையடர்த்தி லிப்போ புரதம்) அதிகரிக்கச் செய்கின்றது.