ஆயுளுக்கும் ஆப்டிக்கல்ஸ் பக்கம் போகாம இருக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்

 

ஆயுளுக்கும் ஆப்டிக்கல்ஸ் பக்கம் போகாம இருக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்

இன்று இருக்கும் இந்த டிஜிட்டல் உலகில் குழந்தைகள் கூட கண்ணாடி போடுகின்ற துர்ப்பாக்கிய நிலை நிலவுகிறது ,இப்படி கண்ணாடி போடாமல் கண் பார்வையை அதிகரிக்க ஆயுர்வேதம் சில குறிப்புகளை கொடுத்துள்ளது .

ஆயுளுக்கும் ஆப்டிக்கல்ஸ் பக்கம் போகாம இருக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். 

பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர், கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மூலிகை கஷாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி, பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது கண்களுக்கு பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.

எதை தவிர்க்க வேண்டும்

காராமணி, ராஜ்மா, சோயாபீன், முலாம்பழம், தர்பூசணி , செந்தூரகம் எண்ணெய், லின்சிட் ஆயில், பிரெட், பன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்