வரிசை கட்டி வரும் வைரஸ்,நுரையீரலை வறுத்தெடுக்காமலிருக்க இந்த வறுத்த உணவுகளை தொடாதிங்க.

 

வரிசை கட்டி வரும் வைரஸ்,நுரையீரலை வறுத்தெடுக்காமலிருக்க இந்த வறுத்த உணவுகளை தொடாதிங்க.

கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பாதித்துள்ளது. உலகெங்கிலும் இது குறித்து புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது ஒரு சமீபத்திய ஆராய்ச்சியில், வறுத்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, நுரையீரலையும்  பலவீனப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. 

தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்பவர்கள் கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு என்று ஆராய்ச்சி கூறியுள்ளது. 

 வறுத்த அல்லது பொரித்த உணவுகளில் AGEs என்னும் மூலக்கூறுகள் அதிகமாக இருக்கும் இது உடல் வீக்கம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் செயல்பாடு குறைதல், செல் செயலிழப்பு மற்றும் குடல் பாக்டீகரியாக்களை எதிர்மறையாக பாதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, நுரையீரலையும்  பலவீனப்படுத்தும். ஆகவே பிரெஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த சிக்கன், பொரித்த மீன் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.   

வரிசை கட்டி வரும் வைரஸ்,நுரையீரலை வறுத்தெடுக்காமலிருக்க இந்த வறுத்த உணவுகளை தொடாதிங்க.

டீ மற்றும் காபியில் அதிக அளவிலான காப்ஃபை இருப்பதனால் இது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்க, ஊட்டச்சத்துக்கள் இல்லாத காப்ஃபைன் பானங்கள், சர்க்கரை பானங்கள், சோடா அல்லது எனர்ஜி பானங்கள் போன்ற செயற்கை சுவையூட்டிகளைக் கொண்ட பானங்களைத் தவிர்த்திடுங்கள். 

பொதுவாக ஆல்கஹால் அளவுக்கு மிஞ்சினால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணிசமாக பாதிக்கப்பட்டு, நிமோனியா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் .

சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்த்தால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, அழற்சியை உண்டாக்கும் புரோட்டீன்களின் உற்பத்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கும். அதோடு உயர் இரத்த சர்க்கரை குடல் பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, குடல் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவித்து, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை குறைத்துவிடும். எனவே சர்க்கரை அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்து, அளவாக சேர்க்க முயலுங்கள்.

  பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், பேக்கரி உணவுகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் அதிக உப்புக்களைக் கொண்டவை. அதிகளவிலான உப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தின் வழக்கமான செயல்பாட்டை தடுப்பதோடு, அழற்சி எதிர்ப்பிற்கான பதிலை அடக்குகிறது மற்றும் குடல் பாக்டீரியாக்களை மாற்றுகிறது. ஆகவே அன்றாட உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ள முயலுங்கள்.

முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை நன்றாக வேகவைக்கப்படவில்லை என்று அர்த்தம். நன்றாக சமைத்தால் தான் தீங்குவிளைவிக்கும் நுண் கிருமிகள் இறந்துபோகும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைத்தால்தான் அது நன்றாக சமைக்கப்பட்ட உணவு என்பது சமையல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.