குழந்தைக்கு வந்திருப்பது கொரானா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலான்னு கண்டறியும் வழி .

 

குழந்தைக்கு வந்திருப்பது கொரானா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலான்னு   கண்டறியும் வழி .

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் போது சில அறிகுறிகள் வைத்து அது நிச்சயம் கொரோனா என்று நம்மால் யூகிக்க முடியாது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று உறுதியானால் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமாகலாம். அதோடு இன்றைய சூழலில் எந்தவிதமான காய்ச்சலாக இருந்தாலும் அது கொரோனாவாக இருப்பதற்கு வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது.

குழந்தைக்கு வந்திருப்பது கொரானா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலான்னு   கண்டறியும் வழி .

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் குழந்தைகளுக்கு பின்வரும்  அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புண்டு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

– காய்ச்சல்

– இருமல்

– மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்

– சோர்வு

– தொண்டை புண் மற்றும்  மூக்கு ஒழுகல்

– தசை வலி அல்லது உடல் வலிகள்

– தலைவலி

– வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு (இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது )

-சுவை அல்லது வாசனை இழப்பு

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு மேற்கண்ட அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்வது மிக அவசியம்.

இவர்களுக்கு என்ன மாதிரியான பரிசோதனை என்றால் இவர்களுக்கும் ஆர்.டி- பி.சி.ஆர். பரிசோதனை தான். இதைத் தவிர்த்து ரேப்பிட் ஆன்டிஜன் டெஸ்டும் உள்ளது. ஆனால் இது பாசிட்டிவ் காண்பித்தால் அது பாசிட்டிவ், ஒருவேளை நெகட்டிவ் என காண்பித்தால் நாம் மறுபடியும் ஆர்.டி- பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும். தொண்டையில் சளி எடுத்து பரிசோதனை செய்வது.

அடுத்தது சிடி பரிசோதனை என்பது நீங்களாக செய்யகூடாது. அதில் ரேடியேஷன் அதிகம். மருத்துவர் சொன்னால் மட்டுமே இந்த பரிசோதனையை நீங்கள் செய்ய வேண்டும். குழந்தையின் விஷயத்தில் முன்கூட்டி பரிசோதனை செய்கிறேன் என்று நீங்களாக முடிவு எடுக்க வேண்டாம்