அக்கம்பக்கத்தில் கொரானா இருந்து, உங்களுக்கு ‘பக்’குனு இருந்தா ,இத ஒரு ‘கப் குடிங்க .

 

அக்கம்பக்கத்தில் கொரானா இருந்து, உங்களுக்கு ‘பக்’குனு இருந்தா ,இத ஒரு ‘கப்  குடிங்க .

உங்களின் அக்கம் பக்கத்தினருக்கு கொரானா பாதிப்பு இருக்கும் நேரத்திலும் ,உங்களுக்கு சளி இருமல் இருக்கும் நேரத்திலும் பயப்படாமல் வீட்டிலேயே இதை கட்டுப்படுத்தி கொள்ள ஆயுர்வேத மருத்துவ நிபுணர் வழிகாட்டுகிறார்.

அக்கம்பக்கத்தில் கொரானா இருந்து, உங்களுக்கு ‘பக்’குனு இருந்தா ,இத ஒரு ‘கப்  குடிங்க .

காய்ச்சல் கஷாயம்

காய்ச்சல் கஷாயம்:

இஞ்சி -சிறிது துண்டு ,

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,

சீரகம் – 1 டீஸ்பூன்,

எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்

நீரை கொதிக்க வைத்து இஞ்சியை சேர்த்து பிறகு சீரகம் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை கொதிக்க விடவும். இறக்கும் போது மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கவும். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இந்த சளி இருமல் மற்றும் நோய்த்தொற்றின் அறிகுறிகளையும் பெருமளவு குறைக்கிறது.

காய்ச்சல், தலைவலி போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையும், அதற்கு முன்னரே தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியம். மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கஷாயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

சாதாரண சளி, காய்ச்சலுக்கு வீட்டிலேயே ஆவிபிடித்தல், வெந்நீர் ஒத்தடம் எனச் செய்துகொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு ஏற்பட்டது சாதாரண சளி, காய்ச்சலாக இருந்தால் இவற்றிலேயே குணமாகிவிடும். வாரம் இருமுறை 15 நிமிடங்கள் வெந்நீரில் ஆவிபிடிக்கலாம்.

.

மூலிகை தேநீர்:

துளசி தேநீர் அறிந்திருக்கிறோம். ஆயுர்வேத மூலிகையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பயன்படுத்துவதும் மிக எளிதானதே. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி சேர்த்து அவை நான்கு பங்காக குறையும் போது மிளகு ஒரு டீஸ்பூன் அளவு இடித்து சேர்க்கவும். பிறகு மீண்டும் கொதிக்கவைத்து இனிப்புக்கு வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வடிகட்டி இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும்படி குடிக்க வேண்டும்.

குறிப்பாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, மார்பு சளி இருக்கும் போது முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தினமும் இரண்டு வேளை எடுக்கலாம்.

நோய்களை எதிர்த்துப் போராடுவதில் நம் உணவு முறைக்கு முக்கியப் பங்குண்டு. தினமும் பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிப்பது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் மிளகுக் கஷாயம், தூதுவளை சட்னி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

 சீரகம், ஓமம் செரிமானக் கோளாறுகளை நீக்கும். வெந்தயம் வயிற்றுவலிக்குச் சிறந்த மருந்து. உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க கீரைகள், காய்கறி, பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்தத் தடுப்பு மருந்துகள், மருத்துவமனை செல்லும் சூழலிலிருந்து நம்மைத் தற்காக்கும்.”