சீசன் மாறும்போது குழந்தைக்கு வரும் சளியையும் ,வலியையும் விரட்ட சிறந்த வழிகள்

 

சீசன் மாறும்போது குழந்தைக்கு வரும் சளியையும்  ,வலியையும் விரட்ட  சிறந்த வழிகள்

சீசன் மாறும்போது குழந்தைக்கு வரும் சளியையும்  ,வலியையும் விரட்ட  சிறந்த வழிகள்

சீசன் மாற்றமடையும்போது, சில அசவுகர்யத்தை நாம் நாம் எதிர்கொள்கிறோம். குறிப்பாக, அந்த மாற்றத்துடன் வருவது தட்பவெப்ப மாறுதல் மட்டுமல்ல, உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு கிருமிகளின் செயல்பாடுகளின் காரணமாக பல்வேறு தொற்றுகளும் அதிகரிக்கிறது. இத்தகைய கால மாற்றத்தின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். ! உங்களது குழந்தை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் (நோய்க் கிருமிகள்) மற்றும் மூலக்கூறுகள் காரணமாக கால மாற்றத்தின் போது அடிக்கடி ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஒரு வலிமையான நோயெதிர்ப்பு ஆற்றல் தேவை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.. அதனால், தட்பவெப்ப நிலை  மாறினாலும் உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்ந்து சிறப்பாக இருப்பதற்கு ஒருசில குறிப்புகள் இதோ:

1. நுண் ஊட்டச்சத்துக்கள் ‘நுண்’ நோயெதிர்ப்புத் திறனை வழங்கும்:

உங்களது குழந்தைக்கு ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். பல ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, குழந்தைகளின் உடலில் நுண்ணூட்டச்சத்து நிலை மோசமாக இருந்தால் அது அவர்களுக்கு பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்புடையதாக உள்ளது. உண்மையில், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியே மோசமான நோயெதிர்ப்பு சக்திதான். ஏனெனில் நோயெதிர்ப்பு செல்லின் மறு உருவாக்கத்திற்கு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மற்ற சத்துக்களுடன் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ மற்றும் கே, செலினியம், மற்றும் தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சுவையான உணவுத் தயாரிப்புகளில் பச்சைக் காய்கறிகள், பழம், கொட்டைகள், பால் பொருட்கள், பயறுகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை சேர்ப்பது உங்களது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்யும்.

2. ஊட்டச்சத்து இணையுணவு

குழந்தைகளின் வேகமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அவர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்து தேவைகள் உள்ளன. ஊட்டச்சத்து குறித்த ஐக்கிய நாடுகளின் துணைக்குழுவின் படி, தங்களது வழக்கமான அன்றாட உணவில் தங்களது உடலுக்குத் தேவையான 100 சதவிகித நுண்ணூட்டச்சத்து தேவைகளைப் நிறைவு செய்ய பெரும்பாலான குழந்தைகள் தவறிவிடுகின்றன.ஹார்லிக்ஸ் போன்ற செறிவூட்டப்பட்ட ஆரோக்கிய பானங்களைச் சேர்ப்பதன் மூலமாக உங்களது வழக்கமான உணவிற்கு மதிப்பினைச் சேர்ப்பதன் மூலமாக உங்களது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை எளிதாக நீங்கள் பூர்த்தி செய்ய முடியும். பாலின் நற்குணத்துடன், கோதுமை மற்றும் பார்லி தானியங்கள் மற்றும் 23 முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஹார்லிக்ஸ் உங்களது குழந்தைக்கு மிகவும் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதற்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் நிறைவாக கொண்டுள்ளது.

3. சூரியஒளி ‘டி’ வைட்டமினை நிறைவாகப் பெறுங்கள்:

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கும் அவசியமான மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துகளில் ஒன்றான வைட்டமின் டி, உடலில் குறைவாக இருப்பதற்கும் தொற்றுகள் அதிகமாக ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி நிலையில் சீதோஷணத்திற்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்கள், தொற்றுகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் நோயெதிர்ப்பு செல் பெருக்கம், ஆன்டிபாடிக்களின் மாறுபாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வைட்டமின் டி முக்கிய பங்காற்றுகிறது. பருவமழை அல்லது குளிர் காலத்தில், மிகவும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து வளமான சூரிய ஒளி உங்களது குழந்தைக்கு குறைவாகத்தான் கிடைக்கிறது, அதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. அதனால் உங்களது குழந்தையின் உணவில் ஊட்டச்சத்து இணையுணவுகள் மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய உணவு பானங்களைச் சேர்ப்பது அவசியமாகும்.

4. விளையாட்டு நேரத்தை அதிகரித்திடுங்கள்:

உங்களது குழந்தை ஏதேனும் உடல் உழைப்புள்ள செயல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும்படி ஊக்கப்படுத்துங்கள். அவை அவர்களது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடல் உழைப்பு சார்ந்த செயல்களில் ஈடுபடுவது அவர்களது உடலில் வீக்கம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் குறைவதற்கும் வீக்கம் ஏற்படுத்தாத பொருட்கள் அதிகரிப்பதற்கும் ஒரு நேர்மறை பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், உங்களது குழந்தையை விளையாட்டுகள் விளையாடவும், ஓடவும் குதிக்கவும் அனுமதித்திடுங்கள், இந்த செயல் மூலமாக அவர்கள் தங்களை ஆபத்தான தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறுவார்கள்.

5. நல்ல சுத்தமான பழக்கவழக்கங்களை அவர்களிடையே உருவாக்குங்கள்:

வலிமையான நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு  தன் சுத்தம் மற்றும் பொது சுத்தத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தை அசட்டை செய்கின்றனர். வீட்டில் உள்ள பொருட்களின் மேற்பரப்பை தொற்று நீக்கம் செய்தல், சுத்தமான குடி தண்ணீரைப் பயன்படுத்துதல், நல்ல சுத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நல்ல கை சுத்த நடைமுறைகளை பின்பற்றுதல், ஆகிய அனைத்தும் சிறந்த நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானவை ஆகும். உங்களது குழந்தை அன்றாடம் குளிப்பதையும் மேலும் நுண்கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கு அவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் முன்பும் பின்பும் கைகளை கழுவுவதையும் உறுதி செய்திடுங்கள். சக்திமிக்க தொற்று-நீக்கி திரவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, சாதாரண சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளைக் கழுவுவதே அற்புதமான பலனைத் தரும்