Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கிளைமேட் மாறினாலே, சனியன் புடிச்ச சளி புடிக்குதேன்னு கவலையா?வாங்க விரட்டலாம்

கிளைமேட் மாறினாலே, சனியன் புடிச்ச சளி புடிக்குதேன்னு கவலையா?வாங்க விரட்டலாம்

கிளைமேட் மாறினாலே, சனியன் புடிச்ச சளி புடிக்குதேன்னு கவலையா?வாங்க விரட்டலாம்

பருவ கால ஒவ்வாமைக்கு அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொண்டு வந்தால் வேலைக்கு ஆகாது. அதிகமான மாத்திரையால் நமக்கு பக்க விளைவுகள் மட்டுமே விளையும். எனவே இந்த அலர்ஜியை  கட்டுப்படுத்த இயற்கை வழிகளை தேர்ந்தெடுப்பதே நல்லது. அதற்கு நீங்கள்  சிலவகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பருவ கால ஒவ்வாமை  உடையவர்களுக்கு தூசி, மகரந்தம் போன்ற பொருட்களும் அலர்ஜியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. .

ளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

​பருவகால மாற்ற அலர்ஜி அறிகுறிகள்

தும்மல்

மூக்கு ஒழுகுதல்

கண்களில் இருந்து தண்ணீர் வடிதல்

தொண்டை கரகரப்பு, தொண்டை புண் மற்றும் காது வலி போன்றவை

தலைவலி

மூச்சு இரைப்பு, மூக்கடைப்பு மற்றும் மூச்சு விட சிரமம்

இருமல் போன்றவை தோன்றுதல்

​குர்செடின் அடங்கிய உணவுகள்

வெங்காயம், மிளகு, பெர்ரி வகைகள், ஆப்பிள்கள் மற்றும் பார்சிலி போன்ற உணவுகளில் குர்செடின் காணப்படுகிறது. இது ஒரு பயோப்ளவனாய்டுகள் ஆகும். இது ஒரு இயற்கையான ஆன்டி ஹிஸ்டமைன் ஆகும். இது அழற்சிக்கு காரணமாக வேதிப்பொருள் உற்பத்தியை தடுக்கிறது. மேலும் இந்த உணவுப் பொருட்களில் உள்ள குர்செடின் விட்டமின் சி உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகும். குர்செடின் உயிரணு சவ்வுகளை உறுதிப்படுத்துகிறது. எனவே இந்த வகை உணவுகளை ஒவ்வாமைக்கு எதிராக செயல்படுகிறது. எனவே பருவ காலங்களில் குர்செடின் அடங்கிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​அன்னாசிபழம்

அன்னாசி பழத்தில் பிரோமலின் என்ற நொதி காணப்படுகிறது. ப்ரோமைலின் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, இது பருவகால ஒவ்வாமைகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.ப்ரோமைலின் சுவாச பாதை தொற்று மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. எனவே மழைக்காலங்களில் அன்னாசிபழம் சாப்பிடலாம் அல்லது உங்க ஸ்மூத்திகளில் சேர்த்து குடித்து வரலாம் நன்மை கிடைக்கும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும்.  சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி  தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.  இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.

கிளைமேட் மாறினாலே, சனியன் புடிச்ச சளி புடிக்குதேன்னு கவலையா?வாங்க விரட்டலாம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews