கலர் கலர் மாத்திரை போட்டும் குறையாத கொலஸ்ட்ராலை,இப்படி குறைக்கலாம் வாங்க .

 

கலர் கலர் மாத்திரை போட்டும் குறையாத கொலஸ்ட்ராலை,இப்படி குறைக்கலாம் வாங்க .

ஒவ்வொரு ஆண்டும் இதய நோய் பாதிப்பால் மரணமடைவோர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து கொண்டே போவதுதான்.
சிறந்த டயட் மூலமே உடலை நோய்த்தாக்காமல் வைத்துகொள்ள முடியும் உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மிதமிஞ்சிய கொழுப்புதான் ரத்த குழாய்களில் படிந்து இதய நோய் வருவதற்கு காரணமாகிறது. உணவு மூலம் அதிகரித்த கொழுப்பை சிறந்த டயட் என்னும் உணவு வழியாகவே குறைக்க முடியும் என்பதால் கொழுப்பை குறைக்கும் உணவு வகை குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களையும் குணப்படுத்தும் வழிகளையும்  பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் கவனமாக இருந்து, உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமற்ற உணவு

நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்வதால், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இத்தகைய நிறைவுற்ற கொழுப்பானது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் அதிகம் நிறைந்துள்ளன. அந்த உணவு பொருட்களாவன கொழுப்பு நிறைந்துள்ள இறைச்சிகள், வெண்ணெய், சீஸ், கேக்குகள், நெய் போன்றவைகளாகும். எனவே கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பரம்பரை காரணிகள்

நோயாளியின் பரம்பரையில், அதாவது குடும்ப வரலாற்றில் யாருக்காவது உயர்நிலை கொலஸ்ட்ரால் இருந்தாலும், உயர்நிலைக் கொலஸ்ட்ரால் வரும். அதிலும் உயர்நிலை கொலஸ்ட்ரால் மரபுரிமையாக கொண்டு ஏற்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வடிவத்தில் ஏற்படுகிறது.

கலர் கலர் மாத்திரை போட்டும் குறையாத கொலஸ்ட்ராலை,இப்படி குறைக்கலாம் வாங்க .

1.வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்

இந்த மாதிரியான வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையானது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2. ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடவும்

ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்..

3. தொடர்ச்சியான பரிசோதனை

உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது பரிசோதித்தால், அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் எதையும் பின்பற்ற முடியும்.

4. எடை குறைவு

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடையை குறைத்தலும் ஒரு வழி தான். ஆம், பொதுவாக உடல் பருமன் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும்.

5. புகைப்பிடித்தலை தவிர்க்கவும்

உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது புகைப்பிடித்தவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்துவிடும்.

6. தினமும் உடற்பயிற்சி

உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.

7. கலோரி குறைவான உணவுகள்

சில உணவுகள் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், ஆப்பிள், பிஸ்தா போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

8. க்ரீன் டீ

அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு ஒரு எளிய வழியென்றால், அது க்ரீன் டீ குடிப்பது தான். ஏனெனில் க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

9. சோயா

சோயா உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்து வந்தாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைந்து, உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.

10. இரத்த சர்க்கரை அளவு

கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க வேண்டுமெனில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான இரத்த சர்க்கரையின் அளவானது, இதய நோய்க்கு வழிவகுக்கும்.

 இவை தவிர ஐஸ்க்ரீம், பேக்கரி வகைகள், தொடர்ந்து சாக்லெட், வெள்ளை சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, ஆடு,மாடு, பன்றி இறைச்சி வகைகள் (அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கும் போது)போன்றவற்றை எடுக்கும் போது இதிலிருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் வேகமாக கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலந்து உட லில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை மிகுதியாக்கிவிடுகிறது.

உங்கள் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவை உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தகுந்த பரிசோதனையில் அறிந்து கொள்ளுங்கள். ஆரோக்யமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.