குழந்தைக்கு வயிற்று வலின்னா ஸ்கேன் பண்ண ஓடாம ,கிட்சன்லேயே குணப்படுத்தலாம்.

 

குழந்தைக்கு வயிற்று வலின்னா ஸ்கேன் பண்ண ஓடாம ,கிட்சன்லேயே குணப்படுத்தலாம்.

பால் கொடுக்கும் தாய் மார்கள் அன்றாடம் தங்களது உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க, தாய்ப்பால் வழியாக பூண்டின் சத்து சேர்ந்து குழந்தையின் வயிற்று வலியை சரியாக்கும்.

ஏப்பம் வர செய்தல்

குழந்தைக்கு உணவு ஊட்டிய பின்னும் தாய்ப்பால் கொடுத்த பின்னும் குழந்தையை உடனே படுக்க வைக்க கூடாது. முதுகில் தட்டி ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.

சிறு குழந்தைகள் படுத்துக்கொண்டே இருப்பதால் தினமும் சில நிமிடங்கள் குழந்தையின் கை கால்களை சைக்கிள் ஓட்டுவது போல லேசாக, மிதமாக கை கால்களை அசைத்து விடுங்கள். இதனாலும் வயிற்றில் சேர்ந்துள்ள வாயு வெளியேறும்.

இளஞ்சூடான ஒத்தடம்

குழந்தையின் வயிற்றில் இளஞ்சூடான ஒத்தடத்தை 3-5 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். இதனால் வயிற்றில் ரத்த ஓட்டம் நன்கு பாயும். வயிறு வலி நீங்கும்.

குழந்தைக்கு வயிற்று வலின்னா ஸ்கேன் பண்ண ஓடாம ,கிட்சன்லேயே குணப்படுத்தலாம்.

மசாஜ் செய்யுங்கள்

சமமான தளத்தில் குழந்தையை படுக்க வைத்து, தேங்காய் எண்ணெயை வயிற்றில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். தொப்புள் சுற்றி எண்ணெயைத் தடவுங்கள். இதனால் செரிமானம் சீராகும். வாயு நீங்கும்.

யோகர்ட்

கால் கப் யோகர்ட்டை குழந்தைகளுக்கு ஊட்டிவிடுங்கள். இதனால் நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றில் உருவாகும். வயிற்றுப்போக்கு இருக்கும் சமயத்தில் யோகர்ட் தருவது நல்லது.

பெருங்காயம்

இளஞ்சூடான தண்ணீரில் சிறிதளவு பெருங்காய தூளை குழைத்து, அந்த பேஸ்டை குழந்தையின் தொப்புள் பகுதியில் தடவிட வாயு நீங்கும்.

பாத அழுத்த சிகிச்சை

 குழந்தையின் பாதத்தின் நடுப்பகுதியின் உள்ள புள்ளிகள் வயிறு தொடர்பானவை. அங்கு சில நொடிகள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க கொடுக்க வயிறு வலி பிரச்னை சரியாகும்.

இஞ்சி

சிறிதளவு இஞ்சியை துருவி, ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் 5 நிமிடங்கள் போடவும். அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். 2 வயது முடிந்த குழந்தைகளுக்கான வைத்தியம் இது.