குழந்தைக்கு சளி பிடிச்சி ,ஜுரம் அடிச்சி, கொரானாவா இருக்குமோன்னு பயமுறுத்தாமலிருக்க இதை கொடுங்க

 

குழந்தைக்கு சளி பிடிச்சி ,ஜுரம் அடிச்சி, கொரானாவா இருக்குமோன்னு பயமுறுத்தாமலிருக்க இதை கொடுங்க

குழந்தைக்கு சளி பிடிச்சி ,ஜுரம் அடிச்சி, கொரானாவா இருக்குமோன்னு பயமுறுத்தாமலிருக்க இதை கொடுங்க

மளிகை பட்டியலில் இடம் பெறும் உளுந்தப் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு என அத்தனை பருப்பு வகைகளுமே குழந்தைகளுக்கு தினமும் சாப்பிடத் தரத்தக்கவையே. இவற்றில் கூடுதலாக சோயா பீன்ஸ் பருப்பு, ராஜ்மா, மொச்சை, முக்கடலை, பட்டாணி என்று தினமொரு வெரைட்டியாக சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பருப்பு வகைகள் இல்லாமல் குழந்தைகளின் ஒரு நாள் கூட கழிய அனுமதிக்காதீர்கள். 

வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

காய்கறிகள்!

உங்கள் குழந்தைகளின் தட்டில் காய்கறிகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். முக்கியமாக, பீட்ரூட், கத்தரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை. பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது. இந்த காய்கறிகளை சூப் ஆகச் செய்து காலையில் அல்லது மாலையில் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க, ‘ரெசிஸ்டன்சி பவர்’ அதிகரிக்கும். அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன், எழும்பு சூப் நல்ல சாய்ஸ்.

தயிர்!

தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும், இதனால் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ப்ளர் மோர் குடிக்கக் கொடுக்கலாம்.

நட்ஸ்!

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர, நோய் எதிர்பு சக்தி சீராக வளரும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடித்து, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

மீன்!

குழந்தைகள் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது, மீன். புரோட்டீன் அதிகம் உள்ள மீனில், ‘ஒமேகா 3’ என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவும். அதனால், வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு மீன் கொடுக்கவும்.

தானிய வகைகள்!

கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ அல்லது தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.

முட்டை!

வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கியிருப்பதால் உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் உதவும். எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி, வேகவைத்த முட்டையில் அதிகளவு உள்ளது.

பழங்கள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும்.

முழு தானியங்கள்
பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும். அன்றாட உணவில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.