குழந்தைக்கு சளி புடிச்சதும் கண்ட சிரப் கொடுத்து வெறுப்பேத்தாம குணப்படுத்தலாம் வாங்க

 

குழந்தைக்கு சளி புடிச்சதும் கண்ட சிரப் கொடுத்து வெறுப்பேத்தாம குணப்படுத்தலாம் வாங்க

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆதலால், அடிக்கடி சளி பிடிக்கும் தொல்லையும் இருக்கத்தான் செய்யும். இது இயல்பு என்றாலும் குழந்தைகள் படும் அவஸ்தையை நம்மால் பார்க்க முடியாது. இதோ குழந்தைகளுக்கான வீட்டு வைத்திய முறைகள். சளி பிடித்திருந்தால் என்னென்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் எனப் பார்க்கலாம்.

குழந்தைகளின் சளியை நீக்கும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்

குழந்தைக்கு சளி புடிச்சதும் கண்ட சிரப் கொடுத்து வெறுப்பேத்தாம குணப்படுத்தலாம் வாங்க

தாய்ப்பால்

0-6 மாத குழந்தைகளுக்கு உணவும் மருந்தும் தாய்ப்பால்தான். சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எது இருந்தாலும் தாய்ப்பாலே குழந்தைக்கு மருந்து.

தாய்ப்பாலில் ஆன்டிபாடிஸ் நிறைந்துள்ளன. கிருமி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை அழிக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

முருங்கை இலை எண்ணெய்

அரை கப் சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடு செய்து, அதில் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளைப் போட்டு, இலைகள் பொரிக்கும் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்த எண்ணெயை குழந்தையின் தலை முடியில் தடவலாம். சளி, இருமல் இருக்கும் சமயத்தில் இந்த எண்ணெயை குழந்தையின் தலையில் தடவுங்கள். இது மிகவும் பழைமையான வீட்டு வைத்தியம்.

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம் இது.

கற்பூரவல்லி

ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயில் ஒரு கற்பூரவல்லி இலையை போட்டு சூடேற்றி, அதன் சாறு எண்ணெயில் இறங்கியதும், வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த எண்ணெயை குழந்தையின் மார்பு பகுதி, முதுகு பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்யலாம்.

கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை செய்யலாம்.

சீரக குடிநீர்

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குடிநீரில் சீரகத்தை போட்டு காய்ச்சி, அதை இளஞ்சூடாக அரை டம்ளர் அளவுக்கு கொடுத்து வந்தால் சளி குறையும்.

யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய்

குழந்தையின் காதுக்கு பின்புறம், தொண்டை, நெஞ்சு பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெயை லேசாகத் தேய்த்து விடலாம்.

கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை செய்யலாம்.

ரசம் சாதம

நம் வீட்டில் வைக்கும் ரசத்தில் மிளகு, சீரகம் சேர்க்கப்படுகிறது. சளி இருமலுக்கு ரசம் சிறந்த மருந்து. சாதத்தை கூழாக மசித்து ரசம் ஊற்றி குழந்தைக்கு ஊட்டி விடலாம். இதை 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.