உங்களுக்கு முப்பது வயசாயிடுச்சா ? இதை படிச்சி, முன்னெச்சரிக்கையா இருங்க

 

உங்களுக்கு முப்பது வயசாயிடுச்சா ? இதை படிச்சி, முன்னெச்சரிக்கையா இருங்க

இன்று இருக்கும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் 30 வயது ஆகிவிட்டாலே உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று அடிக்கடி செக் பண்ண வேண்டும் .இதை குறைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு முப்பது வயசாயிடுச்சா ? இதை படிச்சி, முன்னெச்சரிக்கையா இருங்க

மாரடைப்பு

இதயம் பெரிதாகி, பழுதாகிவிடும்

இரத்தக்குழாய்கள் சிறுத்துப் போதல்

சிறுநீரகம் பழுதாகும்

கண்கள் பாதிக்கப்படும்

ஆயுள் குறையும்

காரணங்கள்

பாரம்பரியம்

மனஅழுத்தம், டென்ஷன்

புகைப்பது, குடிப்பழக்கம்

அதிக உடல் எடை

பொட்டாசியம், கால்சியம் குறைபாடுகள்

உணவில் உப்பை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது

சிறுநீரக பாதிப்புகள்

ஹார்மோன் கோளாறு

ஸ்டீராய்ட் கருத்தடை மாத்திரைகள்

ஹார்மோன் கோளாறுகள்

உடற்பயிற்சி இல்லாமை

அறிகுறிகள்

தலைவலி, தலைசுற்றல், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, உடலுழைப்பிற்கு  மூச்சுத்திணறல், களைப்பு போன்றவை.

அபாய அறிவிப்பு

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும்  உங்களுக்கு இருந்தால் 6 மாதத்திற்கு ஓரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளவும்.

நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்

உங்கள் குடும்ப சரித்திரத்தில் இதய நோய்கள் இருந்தால்

நீங்கள் அதிக எடையுள்ள நபராக இருந்தால்

நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால்

நீங்கள் வழக்கமாக மதுபானம் அருந்துபவராக இருந்தால்

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால்

இருதய நோய், நீரிழிவு அல்லது சிறுநீரக பாதிப்பு போன்ற ஏதாவது பெரிய நோய்கள் உங்களுக்கு இருந்தால்.

உணவு வகைகள்

சோயாபீன்ஸ், சூரியகாந்தி மற்றும் தானிய எண்ணெய்கள், கடலைகள், கோதுமை முளை.

புளிப்புப் பழங்கள் (எலுமிச்சை வகைகள்), பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி.

கடல் உணவுகள், குறிப்பாக கிளிஞ்சல்கள், சிப்பிகள்.

தானியங்கள், சூரியகாந்தி விதைகள், மாமிசம், கடலுணவுகள், நாய்க்குடைகள்.

ஆரஞ்சு, தானிய வகைகள், கீரைகள், பசுமையான இலையுள்ள காய்கறிகள்.

உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தானியங்கள், மாமிசம்.

தானியங்கள்.

பூண்டு இரத்தக் கொதிப்பை குறைக்கும். பூண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் பாலில் காய்ச்சி இரவில் சாப்பிடவும்.