தூங்க முடியாமல் செய்யும் முதுகுவலியை ,தூக்கியெறியலாம் வாங்க

 

தூங்க முடியாமல் செய்யும் முதுகுவலியை ,தூக்கியெறியலாம் வாங்க

காய்ச்சலுக்கு நிகராக தற்போது பெரும்பாலான மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க காரணம் முதுகுவலி தான் என்றும் சொல்லலாம். ஆபத்தான நோயல்ல ஆனால் வலி அவஸ்தையை உண்டாக்கும் நோய்.

தூங்க முடியாமல் செய்யும் முதுகுவலியை ,தூக்கியெறியலாம் வாங்க

நமது உடலில் முதுகில் இருக்கும் எலும்பில் மொத்தம் 33 விதமான எலும்புகள் உண்டு. இவைதான் நம்மை உட்காரவும், ஓடவும், நடக்கவும், படுக்கவும் வைகிறது.

இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்னையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள். உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.

ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள். முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள். உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது. அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது. உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.

பணியிலும் பயணத்திலும் எங்கு உட்கார்ந்தாலும் கால்களையும் பாதத்தையும் பூமியில் பதித்து உட் காருங்கள். முடிந்தவரை உங்கள் இடுப்பு பகுதியை நாற்காலியின் சாய்வில் பொருத்தி அமருங்கள்.. எப்போதும் குனிந்து இருக்காமல் நிமிர்ந்து இருங்கள்.

முதுகுவலிக்கு பிஸியோதெரபி பயிற்சி நல்ல தீர்வாக இருக்கும் என்பதால் மருத்துவர் அறிவுரை யோடு மாத்திரைகள் , பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். முதுகு வலி வந்தது எலும்பு தேய்மானம், தண்டு வட பாதிப்பு என்று நீங்களே சுயமாக நினைக்காமல் உங்கள் பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யுங்கள். ஏனெனில் சாதாரண முதுகுவலி தலைவலி போன்று தான். ஆரம்பத்தில் கவனித்தால் அவை தீவிரமாகாது.