காலையிலே காப்பிக்கு பதிலா இந்த தண்ணீரை குடிக்கிறவங்க, வேலையில வெரி குட் வாங்கலாம்

 

காலையிலே காப்பிக்கு பதிலா இந்த தண்ணீரை குடிக்கிறவங்க, வேலையில வெரி குட் வாங்கலாம்

காலையிலே காப்பிக்கு பதிலா இந்த தண்ணீரை குடிக்கிறவங்க, வேலையில வெரி குட் வாங்கலாம்

அதிக கஷ்டப்படாமல் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்கள் , சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்புதண்ணீரைக் குடித்து வந்தால் வேலையில் நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட்டு ,தங்களின் உயரதிகாரிகளின் பாராட்டை பெறலாம்

இந்த சிறிய விதைகளில் உடல் எடையை குறைக்க கூடிய சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள் இருப்பது உணவை சீரணிக்கவும், கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது. பசி அடிக்கடி எடுக்காது. இதனால் தேவையில்லாமல் நொறுக்கு தீனிகளை நாடி செல்ல மாட்டீர்கள். சோம்பு  விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கான உடலின் உறிஞ்சுதல் சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்ப்ஸை உடைக்க உதவுகின்றன.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை  சுத்தப்படுத்தும்.மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்

சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சிரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை

சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.

சோம்பு  விதைகள் கண்பார்வை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்க உணவில் இரண்டு தேக்கரண்டி இந்த  விதைகளை எடுத்து வருவது பார்வை திறனை அதிகரிக்க உதவும். இதில் விட்டமின் ஏ அதிகளவில் காணப்படுவது கண் பார்வைக்கு நல்லது. கிளைக்கோமாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த  விதைகள் உதவுகின்றன.