நெஞ்செரிச்சல கொஞ்ச நேரத்திலே பஞ்சா பறக்க செய்யும் பஞ்சாங்க வைத்தியம்

 

நெஞ்செரிச்சல கொஞ்ச நேரத்திலே பஞ்சா பறக்க செய்யும் பஞ்சாங்க வைத்தியம்

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு காண வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சரி, இப்போது அந்த மாற்றங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

நெஞ்செரிச்சல கொஞ்ச நேரத்திலே பஞ்சா பறக்க செய்யும் பஞ்சாங்க வைத்தியம்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள அசிட்டிக் ஆசிட், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை மேலும் அதிகரிக்கும். எனவே ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காரமான மற்றும் ஜங்க் உணவுகள்

காரமான உணவுகள் மற்றும் சமோசா, பர்கட், பிட்சா போன்ற உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சாக்லேட், கேக் போன்றவற்றையும் அதிக அளவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவையும் அசிடிட்டியை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது

ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், செரிமான மண்டலத்தினால் உணவுகளை செரிக்க முடியாமல் போய், அதிகமான அமில உற்பத்தி ஏற்பட்டு, அதனால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படக்கூடும். எனவே ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளாமல், அளவாக பலமுறை போதிய இடைவெளி விட்டு சாப்பிடுங்கள்.

சாப்பிட்டவுடன் தூங்குவது

சிலர் உணவை உட்கொண்ட உடனேயே தூங்குவார்கள். இப்படி தூங்கினால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, செரிமான பிரச்சனைகளான அசிடிட்டி போன்றவை ஏற்படக்கூடும்.

உடல் பருமன்

உடல் அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தாலும், அசிடிட்டி வரும் வாய்ப்பு உள்ளது. எனவே கண்ட உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டாம்.

தண்ணீர் சிறந்த தீர்வு

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அமிலத்தின் அளவு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

காப்ஃபைன் பானங்கள்

காப்ஃபைன் பானங்களான காபி, டீ, கோலா போன்றவற்றை அசிடிட்டி இருக்கும் போது தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காப்ஃபைன் பானங்கள் pH அளவை அதிகரித்து, அசிடிட்டியை ஏற்படுத்தும். எனவே காப்ஃபைன் பானங்களை அதிக அளவில் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால் அசிடிட்டியை அதிகப்படுத்தும். எனவே ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் வயிற்றில் உள்ள படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த எரிச்சல் அப்படியே அமில உற்பத்தியை அதிகரித்துவிடும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

தவறான படுக்கும் நிலை

அசிடிட்டி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் இரவில் படுக்கும் நிலையும் எனலாம். நேராக படுப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையால்  தொடர்ந்து ஏற்படும் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே அசிடிட்டி இருந்தால் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.