காக்க காக்க கொரானாவிலிருந்து காக்க ,சேர்க்க சேர்க்க உணவில் இதை தினமும் சேர்க்க

 

காக்க காக்க கொரானாவிலிருந்து  காக்க ,சேர்க்க சேர்க்க உணவில் இதை தினமும் சேர்க்க

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தில் நமது உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய சில ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், நமது உணவு பழக்க வழக்கங்களைப் பொறுத்து அதன் தீவிரம் அதிகமாவதும் குறைவதும் நடக்கும். இந்த ஆராய்ச்சி பி.எம்.ஜே ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய்க்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முன்னணி வீரர்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினர்.

காக்க காக்க கொரானாவிலிருந்து  காக்க ,சேர்க்க சேர்க்க உணவில் இதை தினமும் சேர்க்க

இந்த கணக்கெடுப்பில், பங்கேற்பாளர்களிடம் அவர்களது உணவு மற்றும் பானம் மற்றும் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சைவ உணவை உண்ணும் மக்களில் இந்த தொற்றுநோயால் தீவிர தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அசைவ மக்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்பவர்கள் கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு என்று ஆராய்ச்சி கூறியுள்ளது. இதேபோல், மீன்களை உட்கொள்பவர்களிலும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

மிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறீர்களா? என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.

ஒருவேளை, மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும். உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை வைரஸ் எளிதில் தாக்கும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியான சதவீத வீட்டு உணவு முறையை கடைப்பிடித்தால் உடல் எடையை குறைத்து விடலாம். இதற்காக வேறு முயற்சிகள் செய்ய தேவை இல்லை.

சர்க்கரை நோயாளிகள் சரியான சதவீத வீட்டு உணவை எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதிக எடை உள்ளவர்கள் எடையை குறைக்க மிக வேகமாக ஓடினால் மூட்டு தேய்மானம், இருதய பாதிப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வைரசை ஒழிக்க அரசின் விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.