Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தய பொடி, தயிர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர், தேன் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்து  கொள்ள வேண்டும். இது வழுவழுப்பான பேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளுங்கள். முகம் தவிர கை கால்களிலும் இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

 இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொண்டு ஃபேனுக்கு அடியில் அமர வேண்டாம். முகத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க் இருக்க பிடிக்கும் வரை நிறைய உலர வைத்து விடாதீர்கள். 80% இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் காய்ந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் 80 சதவிகிதம் உலர பொதுவாக பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். ஃபேன் காற்றில் அமர்ந்தால் சீக்கிரம் காய்ந்து விடும் அல்லவா? தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில், நன்றாக வித்தியாசம் தெரியும்.

முகத்திலும் உடம்பிலும் தழும்புகள் உண்டாக காரணம் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், அம்மை கண்ட வடுக்கள் போன்றவற்றால் தான். இதை போக்க  இப்படி செய்து பாருங்கள்

வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்துகொண்டு அதனோடு 5 மடங்கு 5 கப் அளவுநீர் விட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பிறகு அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து இலேசாக் சூடேற்றி வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்துவந்தால் சரும சுருக்கங்கள் மறையும். தழும்புகள் நிறம் மறையும்.

​தழும்புகள் மறைவதற்கு

வெந்தயத்தை தேவையான அளவு இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த நீரோடு வெந்தயத்தை வேகவைக்க வேண்டும். பிறகும் நீரை வெளியேற்றாமல் அதை கொண்டே வெந்தயத்தை அரைத்து முகம் மற்றும் உடலில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர வேண்டும். இதனால் முகப்பருக்கள் இருந்தாலும் கரும்புள்ளிகள் இருந்தாலும் தழும்புகளோடு அவையும் மறையக்கூடும். இதை தொடர்ந்து செய்துவந்தால் 2 வாரங்களில் பலன் தெரியும். .

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக தீர்வு தான் என்று கூறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து...

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இ-பாஸ் நடைமுறையைப் போல்...
- Advertisment -
TopTamilNews