நாட்டறம்பள்ளி எருதுவிடும் விழா… 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

 

நாட்டறம்பள்ளி எருதுவிடும் விழா… 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே பெரிய மூக்கனூரில் நடந்த எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பெரிய மூக்கனூர் கிராமத்தில் பொங்கல் திருநாளையொட்டி இன்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பல்வேறு விதமான அலங்காரங்களில் பங்கேற்ற காளைகள், பந்தைய தூரத்தை நோக்கி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து சென்றன.

நாட்டறம்பள்ளி எருதுவிடும் விழா… 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

இதனை பாதையின் இருபுறமும் சூழந்துநின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டுகளித்தனர். பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் எட்டிப்பிடித்த திருப்பத்தூரை சேர்ந்த கருப்பு நிலா என்ற காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. எருதுவிடும் போட்டியை ஒட்டி, 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.