தேசிய அளவில் டிரெண்டான ’டெல்லி வெல்கம் ஸ்டாலின்’ #DelhiWelcomesStalin

 

தேசிய அளவில் டிரெண்டான ’டெல்லி வெல்கம் ஸ்டாலின்’ #DelhiWelcomesStalin

முதல்வர் ஆனபின்னர் ஸ்டாலின் செல்லும் முதல் டெல்லி பயணம் என்பதால், #DelhiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, 7.20 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 10 மணிக்கு அவர் டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார்.

தேசிய அளவில் டிரெண்டான ’டெல்லி வெல்கம் ஸ்டாலின்’ #DelhiWelcomesStalin

டெல்லி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தமிழ்நாடு இல்லம் செல்லும் முதல்வர், டெல்லியில் இருக்கும் திமுக கட்சி அலுவலகம் அறிவாலயத்தினை பார்வையிடுகிறார். பின்னர் மீண்டு அவர் தமிழ்நாடு இல்லம் திரும்புகிறார்.

தேசிய அளவில் டிரெண்டான ’டெல்லி வெல்கம் ஸ்டாலின்’ #DelhiWelcomesStalin

மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு ஓய்வெடுக்கும் முதல்வர், நாளை சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து பேசுகிறார்.

முதல்வர் ஆனபின்னர் மு.க. ஸ்டாலின் செல்லும் முதல் டெல்லி பயணம் என்பதால், #DelhiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.