மற்ற துறைகளை காட்டிலும் நிதி துறை சிறப்பாக செயல்படுகிறது… நிர்மலா சீதாராமனை பாராட்டிய எதிர்க்கட்சி எம்.பி..

மற்ற துறைகளை காட்டிலும் நிதி துறை சிறப்பாக செயல்படுகிறது… நிர்மலா சீதாராமனை பாராட்டிய எதிர்க்கட்சி எம்.பி..

கடினமான இந்த காலகட்டத்தில் மற்ற துறைகளை காட்டிலும் மத்திய நிதியமைச்சகம் சிறப்பாக செயல்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பாராட்டினார்.

நாடாளுமன்றதில் திவால் விதிமுறைகள் (இரண்டாவது திருத்த) மசோதா 2020 தொடர்பாக எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில் கூறியதாவது: இந்த அசாரண கடினமான காலங்களில் நிதி அமைச்சகம் மற்ற அனைத்து துறைகளையும் விட சிறப்பாக செயல்படுகிறது. உலகம் கடந்து வரும் இந்த அசாரண கடினமான காலங்களில் ஒரு அமைச்சகம் உள்ளது, நான் தவறாமல் நினைக்கிறேன், மற்ற எல்லா துறைகளையும் விட சிறப்பாக செயல்படுகிறது-அது நிதியமைச்சகம்.

மற்ற துறைகளை காட்டிலும் நிதி துறை சிறப்பாக செயல்படுகிறது… நிர்மலா சீதாராமனை பாராட்டிய எதிர்க்கட்சி எம்.பி..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எங்களுக்கு வலுவான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் அவசர காலத்தில் சரி செய்ய வேண்டிய விஷயங்களை சரி செய்வதற்காக மசோதாக்களோடு வரும் மத்திய நிதியமைச்சர் மற்றும் அவரது இணையமைச்சர் ஆகியோரை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்த நேரத்தில் தேவை என்பதால் இந்த மசோதாவை எனது கட்சி ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற துறைகளை காட்டிலும் நிதி துறை சிறப்பாக செயல்படுகிறது… நிர்மலா சீதாராமனை பாராட்டிய எதிர்க்கட்சி எம்.பி..
மனிஷ் திவாரி

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி பேசுகையில், கோவிட்-19 பரவலுக்கு முன்பே 7 காலாண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியில் இருந்தது. பொருளாதாரத்தின் அடிப்படைகளான சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை சிறிது காலமாக அழுத்தத்தில் உள்ளன என தெரிவித்தார்.